பக்கம் எண் :

மூலமும் உரையும்347



25
  அல்லெனு மங்கை மெல்லெனப் பார்க்க
முரன்றெழு கான முயன்றுவா தியைந்த
வடபுல விஞ்சையன் வைகிடத் தகன்கிடைத்
30
  தென்றிசைப் பாண னடிமை யானெனப்
போகா விறகுடன் றலைக்கடை பொருந்தி
யுந்தித் தோற்ற மோசைநின் றொடுங்கப்
பாலையி லெழுப்பி யமரிசை பயிற்றித்
தூங்கலுந் துள்ளலுஞ் சுண்டிநின் றெழுதலுந்
35
  தாரியிற் காட்டித் தருஞ்சா தாரி
யுலகுயி ருள்ளமு மொன்றுபட் டொடுங்க
விசைவிதி பாடிய விசைப்பகை துரந்த
கூடற் கிறையோன் றாள்விடுத் தோரென
என்கண் டுஞ்சா நீர்மை
    முன்கண் டோதா தவர்க்குநங் குருகே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று

துறை: அன்னமோடழிதல்.

     (இ-ம்) இதற்கு, "மறைந்தவற் காண்டல்" (தொல், கள, 20) எனவரும் நூற்பாவின்கண், இட்டுப் பிரிவிரங்கினும்' எனவரும் விதி கொள்க.

1 - 4: கவை...........................................துயில

     (இ-ள்) கவைத்துகிர் - கிளைகளையுடைய பவளக் கொடிகள்; வடைவையின் திரள்சிகை பரப்பி - வடவைத் தீயைப் போலத் திரண்ட தம்முடைய கொழுந்துகளை யாண்டும் பரப்ப; அரைபெறப் பிணித்த - தமது இடையில் அமையக் கட்டிய; கல்குளி மாக்கள் - முத்து முதலிய மணிகளை நீரில் முழுகி எடுக்கும் மாந்தர்களுடைய; உள்ளம் தீக்கும் - நெஞ்சினைச் சுடுகின்ற; உவர்கடல் உடுத்த - உப்பினையுடைய கடல் சூழ்ந்த; தண்நாவலம் பொழில் - தண்ணிய இந்நாவலம் பொழிலிலுள்ள உயிரினங்கள் எல்லாம்; இன்புடன் துயில - இன்பத்தோடே துயிலா நிற்பவும் என்க.

     (வி-ம்.) கவை - கிளை. துகிர் - பவளக்கொடி. வடவை - வடவைத்தீ. இது பவளக்கொழுந்திற் குவமை. முத்துக் குளிப்போர் ஆண்டுள்ள பவளக்கொடிகளைக் கைப்பற்றி இடையிற் கட்டிக்கொள்வர் என்பது கருத்து. கல்-முத்து முதலிய மணிகள். உப்பு