|
அதனுள் மூழ்குவாருடைய
நெஞ்சை வருத்துதலின் கள்குளி மாக்கள் உள்ளந் தீக்கும் உவர்என்றாள். உவர் - உப்பு
தண் நாவலம் பொழில் என மாறுக. நாவலம்பொழில் இமயத்தின் தெற்கும் குமரிக்கு வடக்கும்
உள்ள நிலப்பகுதி. இஃது ஆகுபெயராய் உயிரினங்களைக் குறித்து நின்றது. துயில் இனிதாகலின்
இன்புடன் துயில என்றாள்.
5
- 7: உலகு ............... உறங்க
(இ-ள்)
உலகு அற விழுங்கிய நள்என் கங்குல் - உலக முழுவதையும் மறைத்துள்ள நள்என்னும் அநுகரண
ஓசையையுடைய இவ்விடை யாமத்தின்கண்; துயிலாக் கோளுடன் - உறங்குதலில்லாத தன் சுற்றத்தோடு;
உயிர் இரை தேரும்- உயிரினங்களாகிய தாந்தின்னும் இரைகளை ஆராய்கின்ற; நெடு உடல்
பேழ்வாய் கழுதும் உறங்க - நெடிய உடம்பினையும் பெரிய வாயினையுமுடைய பேய்களும் துயிலா
நிற்பவும் என்க.
(வி-ம்.)
நள்ளென்: குறிப்புமொழி. கங்குல் - இரவு. துயிலாதகேள் எனல் வேண்டிய பெயரெச்சத்தீறு
தொக்கது. கேள் - சுற்றம். உயிராகிய இரை என்க. தேர்தல் - ஆராய்தல். கழுது - பேய்.
கழுதும் என்புழி உம்மை சிறப்பும்மை.
8
- 9: பிள்ளையும் . . . . . . . படுப்ப
(இ-ள்)
விள்ளையும் பெடையும் பறைவரத் தழீஇ - தங் குஞ்சுகளும் பேடும் தஞ் சிறகினுள்ளே வரும்படி
தழுவிக் கொண்டு; சுற்றம் ஏழ்ந்து குருகுகண் படுப்ப- தம்மினப் பறவைகள் சூழாநிற்பக்
குருகினங்கள் கண்ணுறங்கா நிற்பவும் என்க.
(வி-ம்.)
"பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை" (தொல். மரபு. 4) என்பதோத்தாகலான்
குருகிற்குப் பிள்ளை கூறப்பட்டது. பறை - சிறகு. குருகு- பறவைப்பொது. கண்படுத்தல் -
துயிலல்.
10
- 11: கீழ் . . . . . . . துயில
(இ-ள்)
கீழ் அரும்பு அணைத்த முள்அரை முளரி - கீழே அரும்புகளைத் தழுவியுள்ள முள்ளினையுடைய நாளங்களையுடைய
தாமரைகள்; இதழ் கதவு அடைத்து மலர் கண்துயில - இதழ்களாகிய கதவுகளை மூடிக்கொண்டு
மலர்களாகிய தங்கண்கள் துயிலா நிற்பவும் என்க.
(வி-ம்.)
அரை - நாளம். இதழ்களாகிய கதவு என்க. தாமரை மலர்க்கண் துயில என முதல்வினை சினையொடு
முடிந்தது.
12
- 13: விரிசினை . . . . . . . உறங்க
(இ-ள்)
விரிசினை பொதுளிய - விரிந்த கிளைகளில் தழைத்துச் செறிந்த; பாசிலை ஒடுக்கி -
பச்சை இலைகளை
|