பக்கம் எண் :

மூலமும் உரையும்349



ஒடுக்கிக் கொண்டு; பூவொடும் வண்டொடும்- மலர்களோடும் அவற்றினுள் அடங்கிய வண்டுகளோடும்; பொங்கரும் உறங்க- சோலைகளும் துயிலா நிற்பவும் என்க.

     (வி-ம்.) பாசிலை - பச்சையிலை, தேன் பருகிய வண்டுகளோடும் என்றவாறு. பொங்கர் - சோலை.

14 - 16: பான்முகம் . . . . . . . அலைப்ப

     (இ-ள்) புள்கால் பாட்டினர்க்கு - பறவையின் கால்களையுடைய தும்புரு நாரதராகிய யாழ்வலவர் யாழ்வலவர் படலுக்கு; உறையுள் கொடுத்த - தங்குமிடமாக அருளிச்செய்த; பால்முகம் களவின் குறுங்காய் பசு இணர்- பாலைத் தன்னிடத்திலுள்ள களாவினது குறிய காயுடன் கூடிய பசிய இலைக்கொத்துக்கள் கிடந்து; மயிர் கறை கருவி துணை குழை அலைப்ப- மயிர்குறைக்கின்ற கத்தரிகை போன்ற இரண்டு செவிகளினும் அசையா நிற்ப என்க.

     (வி-ம்.) தும்புருவும் நாரதருமாகிய இருமுனிவர்க்கும் கால்கள் மக்கட்கால் போலாவாய்ப் பறவைக் கால்கள் போலிருத்தலினாலும் இருவரும் யாழ் வல்லுநர் ஆதலாலும் அவரைப் புட்கால் பாட்டினர் என்றார். பாட்டிற்கு உறையுள் என்றது பாடலை விரும்பிக் கேட்கும் என்றவாறு. களாக்காயில் பால் இருத்தல் இயல்பாகலின் பான்முகக்காய் என்றார். இணர் - கொத்து. களா: ஆகாரம் குறுகி கள என நின்றது. மயிர் குறை கருவி - கத்தரிகை துணை - இரண்டு. குழை: ஆகுபெயர்; செவி என்க.

17 - 18: வரிந்த . . . . . . . இருத்தி

     (இ-ள்) வரிந்த இந்தனச் சுமை - கட்டப்பட்ட விறகுச் சுமையினை; மதி அரவு இதழி அகன்று - திங்களும் பாம்புங் கொன்றை மாலையும் நீங்கப்பெற்று; கட்டு அவிழ்ந்த சேகரத்து இருத்தி - சடைக்கட்டு நீங்கிய தனது திருமுடியின்மேல் வைத்துக் கொண்டு என்க.

     (வி-ம்.) இந்தனம்-விறகு என்னும் பொருளுடைய வடசொல், மதி - ஈண்டுப் பிறைத் திங்கள். கொன்றை: ஆகுபெயர். சேகரம் - முடி. விறகுச் சுமையை முடிமேல் வைத்து என்க.

19 - 23: வீதியும் . . . . . . . பார்க்க

     (இ-ள்) வீதியும் கவலையும் மிகவளம் புகன்று - மதுரை நகரத்துத் தெருக்களினும் சந்திகளினும் மிகையான விலைகூறிச் சென்று; பொழுது கண்மறைந்துபோன தீவாய் செக்கர்-கதிரவன் கண்ணுக்குத் தோன்றாமல் மறைந்துபோனமையாலே தீயையொத்த செவ்வானமானது; தணந்தோர் உள்ளத்துள் உற புகுந்தபின் - காதலரைப் பிரிந்துள்ளோருடைய நெஞ்சத்தின் கண் ஊடுருவி நுழைந்த பின்னர்; கார் உடல் காட்டி கண்ட