பக்கம் எண் :

350கல்லாடம்[செய்யுள்43]



கய்புதைய - தனது கரிய உடம்பினை யாவருக்கும் காட்டித் தன்னைக் கண்டோருடைய கண்கள் தன் மேனியிற் புதைந்து போம்படி; அல்எனும் மங்கை மேல் எனப் பார்க்க - இரவு என்னும் பெண்ணும் உலகினை மெல்லென்று உற்றுநோக்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) கவலை சந்தியும் சதுக்கமும் முதலியன. வளம் - விலைப் பொருள். மறைந்த - மறைந்தமையாலே. வாய்: உவமவுருபு. தணந்தோர் - காதலரைப் பிரிந்து தனித்துறைவோர். நெஞ்சினுட் புகுந்து வருத்துதலின் உள்ளத்துள் உறப் புகுந்தபின் என்றாள். அல் - இரவு.

24 - 27: முரன் . . . . . பொருந்தி

     (இ-ள்) முரன்று எழுகானம் முயன்று - ஒலித்தெழா நின்ற இசைக் கலையிலே பெரிதும் முயற்சி செய்து அது காரணமாக; வாது இயைந்த வடபுல விஞ்சையன்- பிறஇசை வாணரோடே வாதிட்டு வெல்லுதற்கு வந்த, வடநாட்டு இசை வாணனாகிய எமநாதன் என்னும் பாணன்; வைகு இடத்து அகன்கடை - தங்கியிருக்கும் மாளிகையின் பெரிய வாயிலிலே சென்று அவன் நீ யாரென வினவ; யான்தென்திசை பாணன் அடிமை என - யான் தென்றிசையிலுள்ள இம்மதுரைமா நகரத்தில் வாழும் பாணபத்திரன் என்னும் இசைவாணனுடைய அடிமைகாண் என்று கூறி; போகா விறகடன் தலைக்கடை பொருந்தி - விலைபோகாத விறகோடே அம்மாளிகையின் தலைவாயிலிலே இருந்து என்க.

     (வி-ம்.) முரலுதல் - உலித்தல். கானம் - இசை. வாது - சொற் போர். வாடபுலம் - வடநாடு. விஞ்சையன் - வித்தையையுடையோன். ஈண்டு இசைக் கலையோன் என்பதுபட நின்றது. கடை - வாயில். தென் திசை: ஆகுபெயராய் மதுரையைக் குறித்து நின்றது. பாணன் - பாணபத்திரன் என்னும் ஒரு மெய்யடியார். விலைபோகா விறகு என்க. தலைக்கடை - முன்புற வாயில்.

28 - 34: உந்தி . . . . . . . என

     (இ-ள்) உந்தி தோற்றம் ஓசை நின்று ஒடுங்க-உந்தியில் தோற்றும் இயல்புடைய ஓசையானது தோன்றி நின்றொடுங்க; பாலையில் எழுப்பிப்பின்; அமர்இசை பயிற்றி-அமரோசையாக இறக்கி; தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் தாரியில் காட்டி -தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் தாரியில் காட்டி - தூங்கல், துள்ளல், மெலிந்து நின்று எழுதல் என்னும் இசை விகற்பங்களை ஒழுங்காகக் காட்டி; தரும் சாதாரி - பாடியருளிய சாதாரி என்னும் இசையை; உலகுஉயிர்