|
இனி அதனை, நாவலந் தண்பொழி லின்புடன்றுயில, கழுது முறங்க, முள்ளரை முளரி இதழ்க் கதவடைத்து, மலர்க்கண்டுயில, பூவொடும் வண்டொடும் பொங்கரு முறங்க, அந்தனச்சுமை சேகரத்திருத்தி, அல்லெனு மங்கையு மெல்லெனப் பார்க்க, வாதியைந்த வடபுல விஞ்சையன் வைகிடத் தகன்கடைத் தென்திசைப் பாணனடிமை யானெனப் போகா விறகுடன் தலைக்கடைப் பொருந்தி இசை விதிபாடி இசைப்பகை துரந்த கூடற் கிறையோன் றாள்விடுத் தோரென, என்கண் டுஞ்சாநீர்மை, நங்குருகு அவர்க்கு ஓதா தென்செய் கேனென, வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|