பக்கம் எண் :

மூலமும் உரையும்373



20
  மள்ளற் பழனத் தணிநீர்க் கூட
னீங்கா துறையு நிமிர்சடைப் பெருமா
25
  னுரகன்வாய் கீண்ட மாதவன் போல
மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக்
கூலஞ் சுமக்கக் கொட்டா ளாகி
நரைத்தலை முதியோ ளிடித்தடு கூலிகொண்
டடைப்பது போல வுடைப்பது நோக்கிக்
30
  கோமக னடிக்க வவனடி வாங்கி
யெவ்வுயி ரெவ்வுல கெத்துறைக் கெல்லா
மவ்வடி கொடுத்த வருணிறை நாயகன்
றிருமிடற் றிருளெனச் செறிதரு மாமுகி
லெனதுகண் கடந்து நீங்கித்
  துனைவுடன் செல்ல லொருங்குபு புரிந்தே.

(உரை)
கைகோள் : கற்பு. தலைவன் கூற்று

துறை: முகிலொடு கூறல்.

     (இ-ம்) இதற்கு, "கரணத்தி னமைந்து முடிந்த காலை" (தொல். கற்பி.) எனவரும் நூற்பாவின் கண் 'மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்' என்னும் விதிகொள்க.

1 - 3: கருங்குழல் . . . . . . . . . . காண்பாள்

     (இ-ள்) கருங்குழல் செவ்வாய் சிறுஇடை மடந்தைக்குகரிய கூந்தலினையும் சிவந்த வாயினையும் நுண்ணிடையையுமுடைய தலைவிக்கு; உளத்துயர் ஈந்து- நெஞ்சத்தில் துன்பத்தைக் கொடுத்து; கண்துயில் வாங்கிய ஆனா இன்னல் அழிபடக் காண்பான் - கண் உறங்குதலை நீக்கிய ஒழியாத துன்பத்தால் அவள் வருந்தலைக் காணும் பொருட்டு என்க.

     (வி-ம்.) கருங்குழற் செவ்வாய் என்புழிச் செய்யுளின்ப முணர்க. ஒன்றைக் கொடுத்துப் பண்டமாற்றாக ஒன்றை வாங்கினாற் போல உளத்துயர் ஈந்து கண்துயில் வாங்கிய என்றான். இன்னல் - துன்பம். அழிபட : ஒருசொல். அழிய என்றவாறு.

4 - 7: விரிபொரி . . . . . . . . . . சொற்று

     (இ-ள்) விரிபொரி சிந்தி மணமலர் பரப்பி - வாய்விரிந்த பொரியைத் தெளித்து நறுமணங் கமழும் மலர்களைப் பரப்பி; தெய்வக் குலப்புகை - தேவகோட்டங்களில் புகைக்குங் குங்கி