|
லியப் புகை; விண்ணொடும்
விம்ம - வானமெங்கும் பரவா நிற்ப; இருநாள் திசையும் உண்பலி தூவி - எட்டுத் திசைகளினும்
சோற்றுப் பலியினை இறைத்து; நால்நூல் மாக்கள் - நாலு கின்ற பூணூலையுடைய பார்ப்பனர்;
நணி குறிசொற்று - வந்து குறிகளைச் சொல்லியதால் என்க.
(வி-ம்.)
விரிபொரி: வினைத்தொகை. தெய்வகுலம் - தேவ கோட்டம். உண்பலி- தெய்வம் உண்ணும்
பலி; என்றது சோற்றுப் பலியை. நால்நூல்; வினைத்தொகை. நால்நூல் மாக்கள் என்றது
இகழ்ச்சி. வேதம் ஒதாமல் பூணூல் மட்டும் தாங்கித் திரிகின்ற பார்ப்பனர் என்றவாறு.
நண்ணி - நணி என இடைகுறைந்து நின்றது. சொற்று - சொல்லி. இதனைச் செயவெனெச்சமாக்கி
ஏதுவாக்குக.
8
- 12: பக்கம் . . . . . . . . . . குருகினமும்
(இ-ள்)
நெடுநகர் முன்றில் - நெடிய நகரத்தினது முற்றத்தின்; பக்கம் சூழ்ந்த- பக்கங்களிலே
சூழ்ந்துள்ள; கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர்க்காலும் - கரையை அகழ்ந்து எடுத்த மறிக்கப்பட்ட
நீரோடும் வாய்க்காலும்; வெள்கார்ப் பெய்யும் நாள் குறித்து - வெள்ளிய கார்நெல்லை
விதைக்கும் நாளைக் குறித்துக்கொண்டு; உழுநரும்- உழுகின்றவர்களும்; சூல் நிறைந்து உளையும்
சுரிவளை சாற்றும்-கருமுதிர்ந்து வருந்தா நின்ற சுரிந்த முகமுடைய சங்குகளின் ஆரவாரமும்;
இனம்கயல் உண்ணும் களிகுருகு இனமும் - கூட்டமான கயல்மீனைத் தினன்ாநின்ற களிப்பினையுடைய
பறவைக் கூட்டங்களும் என்க.
(வி-ம்.)
நகர் - ஈண்டு மதுரை. கோடு - கரை. மறிநீர்: வினைத்தொகை. நீர்க்கால் - வாய்க்கால்.
கார் - ஒருவகை நெல். உளைதல் - வருந்துதல். வளை- சங்கு. குருகு - பறவை. நாரை எனினுமாம்.
13
- 15: வரை . . . . . . . . . . . . . ஈர்க்குநரும்
(இ-ள்)
வரை பறை அரிந்த வாசவன் தொழுது - மலைகளின் சிறகுகளை அரிந்த இந்திரனை வணங்கி;
நிரைநிரை விளம்பி - வரிசை வரிசையாக நின்று குரவைபாடி; வழிமுடி நடுநரும் - முறையே
நாற்றுமுடியினை அவிழ்த்து நடுகின்ற உழத்தியரும்; நாறுகழிதுற்ற சகடு - நாற்று முடிகளை
நிரம்பப் பெய்த வண்டிகளை; ஈர்க்குநரும் - இழுத்துச் செல்கின்றவர்களும் என்க. (வி
- எம்.) பறை - சிறகு. வாசவன் - இநதிரன். இவன் மருத நிலத்துத் தெய்வமாதலால் நாற்று
நடுகின்ற உழத்தியர் இவனைத் தொழுது நடுவாராயினர் என்க. இவன் மருதநிலத் தெய்வமாதலை
'வேந்தன் மேய தீம்புன லுலகமும்' (தொல். அகத். ரு) எனவரும் சொல்காப்பியத்தானும்
உணர்க. நாறு - நாற்று. கழி : மிகுதி குறித்த உரிச்சொல். துற்றுதல் - நிறைத்தல்.
சகடு - வண்டி.
|