|
16 - 20: தாமரை . . . . . . . . . . பொருமான்
(இ-ள்)
தாமரை பாடும் அறுகால் கிளியும் - தாமரை மலரிலிருந்து இசைபாடா நின்ற வண்டுகளும்;
உறைத்து - அதிர்த்து; ஏறி கம்பலை - ஒலிக்கின்ற பேரொலியானது; உம்பரைத் தாவி
முடித்தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்- தேவர்களை அடைந்து அவர்களுடைய முடியணிந்த
தலைகளைத் திமிர்த்துப் போம்படி இடைவிடாமற் செய்கின்ற; அள்ளல் அணிநீர் பழனத்துக்
கூடல் - உழுத சோற்றினையும் அழகிய நீரையுமுடைய கழனிகளாற் சூழப்பட்ட மதுரையின்கண்;
நீங்காது உறையும் நிமிர்சடை பெருமான் - ஒருபொழுதும் நீங்காதே எழுந்தருளியிருக்கின்ற
நிமிர்ந்த சடையையுடைய சொக்கப் பெருமானும் என்க.
(வி-ம்.)
அறுகாற் கிளி என்றது வண்டுகளை. கம்பலை - பேரெலலி, உம்பர்- தேவர். திமிர்த்தல்
- திமிரேறச் செய்தல். அள்ளல் - சேறு. அணிபழனம் நீர்ப்பழனம் எனத் தனித்தனி
கொள்க. நிமிர்சடை: வினைத்தொகை. நகர்முன்றில் சூழ்ந்த வாய்க்காலும் உழுநரும்
வளைச்சாற்றும் குருகினமும் முடிநடுநரும் சகடீர்ப்போரும் அறுகாற் கிளியும் எறிகம்பலை
என இயைக்க.
21
- 25: உரகன் . . . . . . . . . . நோக்கி
(இ-ள்)
உரன் வாய்ண்ட மாதவன்போல-பாம்பினது வாயைக்கிழித்த திருமால் போல; மண் அகழ்ந்து
எடுத்துவருபுனல் - மண்ணைத் தோண்டி எடுத்து வருகின்ற; வையைக் கூலம் சுமக்க - வையையாற்றின்
கரையை அடைத்தற்கு மண் சுமக்கும் பொருட்டு; கொட்டுஆள் ஆகி - மண்வெட்டியினையுடைய
கூலியாளாகி வந்து; நரைதலை முதியோள் இடித்து அடுகூலி கொண்டு - நரைத்த தலையினையுடைய
மூதியோள் இடித்து அடுகூலி கொண்டு - நரைத்த தலையினையுடைய மூதாட்டியாகிய வந்தி என்பவள்
மா இடித்து அட்ட பிட்டுணவைக் கூலியாகப் பெற்று; அடைப்பதுபோல - கரையினை அடைப்பதுபோலத்
தொழில் செய்யவும் அடைபடாமே; உடைப்பது நோக்கி - அக்கரை உடைபடுவதனைப் பார்த்து
என்க.
(வி-ம்.)
உரகன் - பாம்புருக் கொண்டு வந்த ஓர் அசுரன். மாதவன்: திருமால். இவன் இறைவனுடைய
அடியைக் காணும் பொருட்டுப் பன்றியாகி மண்ணகழ்ந்தமையாலே மாதவன் போல மண் அகழ்ந்தெடுத்து
வருபுனல் வையை என்றார். கூலம் - கரை. மண் சுமக்க என்க. கொட்டாள் - கொட்டினையுடைய
ஆள். கொட்டு - மண்வெட்டி. இனி மண்கொட்டும் ஆள் எனினுமாம். இடித்தடு வலிஇடித்துச்
சமைக்கின்ற பிட்டாகிய கூலி. கொன்றாளாகி என்பதும் பாடம். கொற்றுஆள் - கூலியாள்
இஃது இக்காலத்துக் கொத்தாள் என வழங்குகிறது.
|