பக்கம் எண் :

மூலமும் உரையும்389



30
  வாவியிற் கேட்ட காவியங் களத்தினன்
றிருக்கண் கண்ட பெருக்கினர் போல
35
  முளரியங் கோயிற் றளைவிட வந்து
நல்லறம் பூத்த முல்லையந் திருவினை
ணின்னுளத் தின்னன் மன்னறக் களைந்து
பொருத்தங் காண்டிவண் டாரு
மருத்தியங் கோதை மன்னவன் பாலே.

(உரை)
கைகோள் : கற்பு. தோழி கூற்று

துறை: ஊடல் தணிவித்தல்.

     (இ - ம்.) இதற்கு "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் 'உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக் கண்ணும்' எனவரும் விதி கொள்க.

15 - 18: கறங்கு . . . . . . . . . . . . . தரளமும்

     (இ-ள்) கறங்கு இசை அருவி அறைந்து நிமிர் திவலையும்-முழங்காநின்ற ஓசையினையுடைய அருவி வீழ்தலாலே எழுாநின்ற துளிகளும்; துருத்திவாய் அதுக்கிய குங்குமக் காண்டமும் - நீர்வீசும் துருத்தி என்னும் கருவியின் வாயை அழுத்துவதனாலே சிதறுகின்ற குங்குமங் கலந்த நீரும்; குறமகார் கொழிக்கும் கழை நித்திலமும் - குறவர் மக்கள் விளையாட்டின்கண் கொழிக்கின்ற மூங்கில் முத்துக்களும்; நெடுநிலை அரங்கில் பரிபெறு தரளமும் - நெடிய மேனிலை மாடத்தின்கண் அமைந்த கூத்தாட்டரங்கின்கண் மாலைகள் அறுந்து சிந்துகின்ற முத்துக்களும் என்க.

     (வி-ம்.) கறங்குதல் - முழங்குதல், அறைந்து - அறைய, திவலை - துளி, துருத்தி - நீர்வீசுங் கருவி. காண்டம் - நீர், மகார் - குழந்தைகள் - கழை - மூங்கில், நித்திலம் - முத்து. அரங்கு - ஆடலரங்கு, பரிதல், அறுதல், தரளம் - முத்து.

19 - 24: புனம் . . . . . . . . . . அன்றிலும்

     (இ-ள்) புனம்பட எறிந்த கார் அகில் தூமமும் - காடு கொடும்படி வெட்டி வீழ்த்திய கரிய அகில் மரத்தின்கண் தீக்கொளுவுதலாலே ஏழுந்த புகையும்; அந்தணர் பெருக்கிய செந்தீ புகையும்-மறையோரால் வளர்க்கப்பட்ட சிவந்த வேள்வித் தீயின் புகையும்; வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும்-