பக்கம் எண் :

390கல்லாடம்[செய்யுள்50]



வேங்கையின் பூந்துகளை விரும்பிய பெடை வண்டுகளும்; விரிகந்தி படிந்த மென்சிறை வண்டும் - பாளை விரிந்த கமுகின்கண் மொய்க்கின்ற மெல்லிய சிறகுகளையுடைய ஆண் வண்டுகளும்; சந்தனப் பொங்கர் தழைசிறை மயிலும் - சந்தனப் பொழிலிலே கூத்தாடுகின்ற செழித்த சிறகினையுடைய மயில்களும்; முன்றில் அம் பெண்ணைக் குடம்பைகொள் அன்றிலும் -முற்றத்தில் நிற்கும் பனையின்மேல் அமைந்த கூட்டில் வதிகின்ற அன்றிற் பறவைகளும் என்க.

     (வி-ம்.) புனம் - காடு. அகிலில் தீக்கொளுவியதனால் உண்டாகும் தூமம் என்க. தூமம் - புகை. வேங்கை - ஒருவகை மரம். சுரும்பு - பெடைவண்டு. கந்தி -கமுகு. சிறை - சிறகு. வண்டு - ஈண்டு ஆண்வண்டு. பொங்கர் - பொழில், தழைசிறை: வினைத்தொகை. முன்றில் - முற்றம். குடம்பை - கூடு, அன்றில் - ஒருவகைப் பறவை. இதனை இக்காலத்தார் வக்கா என வழங்குவர்.

25 - 27: ஓன்றினொடு . . . . . . . . . . பெருமான்

     (இ-ள்) ஒன்றினொடு ஒன்று சென்று தலைமயங்கும் - ஒன்றோடொன்று சேர்ந்து தம்மில் மயங்குதற்கிடமாகிய; குழகன் குன்றம் - முருகக் கடவுள் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்தையுடைய; கூடல் அம்பதி நிறை - நான்மாடக் கூடல் என்னும் அழகிய மதுரைப் பதியின்கண் நிறைந்துள்ள; மஞ்சு அடைகுழல் பெறு - முகிலையொத்த கூந்தலையுடைய கங்கை நங்கை தனக்கிடமாகப் பெற்றுள்ள; செஞ்சடைப் பெருமான் - சிவந்த சடையினையுடைய சிவபெருமான் ஆகிய என்க.

     (வி-ம்.) அருவித் திவலையும், குங்குமக் காண்டமும் நித்திலமும், தரளமும், தூமமும், புகையும், சுரும்பும், வண்டும், மயிலும், அன்றிலும், தலைமயங்கும் குன்றம் என இயைக்க. தலைமயங்கல்: ஒருசொல்; கலத்தல் என்பது பொருள். குழகன்- முருகன். குன்றம் - திருப்பரங்குன்றம். மஞ்சடை குழல் : அன்மொழித் தொகை. கங்கை நங்கை என்க. பெருமான் - சிவபெருமான்.

28 - 32: அருந்தமிழ் . . . . . . . . . . திருவினள்

     (இ-ள்) அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல் - எல்லை காண்டற்கரிய தமிழ்ப்புலவனாகிய நக்கீரன் பாடிய பெருமையுடைய தமிழ்ச் செய்யுளை; வாவியில் கேட்ட - பெற்றாமரைக் குளத்தின்கண் தன் செவியாற் கேட்டருளிய; காவி அம்களத்தினன் - நீலநிறமுடைய அழகிய மிடற்றினையுடைய சோமசந்தரக் கடவுளினது; திருக்கண் கண்ட பெருக்கினர் போல - திருக்கோலத்தைத் தம் கண்ணால் கண்ட அன்புப் பெருக்கினையுடைய அடியார் போல; முளரி அம்கோயில் தளைவிடவந்து - தாமரையாகிய கோயில் இதழாகிய கதவுகளைத் திறந்துவிட