|
இங்கு வந்து; நல்அறம்
பூத்த முல்லைஅம் திருவினள் - நல்ல இல்லறத்தை மேற்கொண்டு பெருக்கிய அறக் கற்பினையுடைய
அழகிய திருமகளே என்க.
(வி-ம்.)
அருந்தமிழ் - எல்லை காண்டற்கரிய தமிழ் என்க. கீரன் - நக்கீரன், பெருந்தமிழ்
- பெருமையுடைய தமிழ். பனுவல்-செய்யுள். இறைவனுடைய செய்யுளுக்குக் குற்றங்வறிய நக்கீரனை
இறைவன் நெற்றிக்கண்ணால் நோக்க நக்கீரன் அவ்வெப்பம் பொறாமல் பொற்றாமரைத்
தடத்திற் போய்வீழ்ந்து தன்னைக் காப்பாற்றியருளும் படி பாடிப் பரவினானாக, அருளுருவமாகிய
இறைவன் அவன் பாடல் கேட்டு மகிழ்ந்து அவனைக் கரையேற்றிக் காப்பாற்றினானாதலின்
கீரன் தமிழ்ப் பனுவல் வாவியிற்கேட்ட காவியங்களத்தினன் என்றாள். வாவி ஈண்டுப்
பொற்றாமரைக் குளம். களத்தினன் திருவைக்கண் கண்ட பெருக்கினர் என்க. தலைவியைத்
திருமகளாக உருவகிக்கின்றாளாகலின் தன்னுடைய தாமரைக் கோயிலிலிருந்து ஈண்டுவந்து நல்லறம்
பூத்த திருவினள் என்றாள். நல்லறம் என்றது ஈண்டு இல்லறத்தை. அவை விருந்தோம்பல்
முதலியன. "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை" (குறள். 46) என்றார் திருவள்ளுவரும், முல்லை
கற்புடைமை. ஊடல் தீர்தற்கு ஏதுக் கூறுவாள் முல்லையந் திருவினள் என்றாள். என்னை?
"சேக்கை இனியார்பாற்
செல்வான் மனையாளாற்
காக்கை கடிந்தொழுகல் கூடுமோகூடா" (பரிபாடல். 20. 86 - 87) |
ஆதலின் நீ ஊடல் தீர்தல்
வேண்டும் என்பது இத்தோழியின் கருத்தாகலின் என்க. திருவினள்: அண்மைவிளி.
1
- 5: அவ்வுழி . . . . . . . . . . ஒருவி
(இ-ள்)
அவ்வுழி அவ்வுழி பெய்உணவு உன்னி - பரத்தையர் சேரியின்கண் அவ்வவ் வீடுகளில் தனக்கு
இடப்படுகின்ற உணவினைக் கருதி; முகன்தரும் இருசெயல் அகன்பெறக் கொளுவும் - முகமானது
மெய்ப்பாடாகக் காட்டும் விருப்பும் வெறுப்பும் என்னும் இரண்டு செயல்களையும் தன் நெஞ்சிலே
பொருந்தக் கொள்கின்ற; புல்லப் பாண்மகன் - புன்மையுள்ள பாணனுடைய; சில்லையும் இன்றி
- இழிதகைமையும் இன்றி; இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி - இன்பம் தருகின்ற
சொற்களையுடைய பொய்யன்பினையுடைய பரத்தையர்களையும் அகற்றி; முடித்தலை மன்னர் செருக்குநிலை
ஒருவி - முடியணிந்த தலையினையுடைய அரசர்களுக்கியல்பாக உள்ள செருக்குடைமையையும் தன்பானின்று
விலக்கி என்க.
(வி-ம்.)
அவ்வுழி அவ்வுழி - அங்கங்கே. முகன், அகன் இரண்டும் போலி, புல்லம் - புன்மை. சில்லை
- இழிதகவு. பாணன் கில்லையுமின்றி என்றது பாணனை விடுத்துப் பொய்கூறுவிக்கும் இழிதகைமையும்
இன்றி என்றவாறு. இன்பக் கிளவி அன்பினர் என்றது
|