|
இகழ்ச்சிக் குறிப்பு.
தலைவன் அரசனாகலின் அவனுக்கியல்பாக உள்ள செருக்கினையும் விடுத்து வந்துள்ளான் என்பாள்
முடித்தலை மன்னர் செருக்குநிலை ஒருவி என்றாள்.
6
- 11: பொன் . . . . . . . . . . சிறுவனை
(இ-ள்)
பொன்உறு ஞாழல் பூவுடன் கடுக்கும்-பொன்னிறம் பொருந்திய ஞாழற் பூவினையொத்த; பெழ்வாய்ப்
புலி உகிர் சிறுகுரல் விளங்க - பெரிய வாயினையுடைய புலியினது நகத்தாலியன்ற அணிகலன்
தனது சிறிய கழுத்திற்கிடந்து விளங்காநிற்ப; அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டி -
அமிழ்தினையொத்த வாயூறல் சிந்துகின்ற செங்குமுத மலரையொத்த தன் வாயினைக் குதட்டி;
பழங்கொள் தத்தை வழங்குசொல் போலும் மழலை கிளவியும் - பழத்தையே உணவாகக் கொள்ளுகின்ற
கிளி மொழிகின்ற மொழியையொத்த மழலைச் சொல்லையும்; இருநிலத்து இன்பமும் ஒருவழி
அளிக்கும் - இம்மையும் மறுமையுமாகிய ஈரிடத்தும் உண்டாகும் இன்பங்களையும் ஓரிடத்தே
உதவுகின்ற; இருங்கதி சிறுவனை - பெரிய வீட்டின் பத்தைத் தரும் இயல்புடைய நம் புதல்வனை
என்க.
(வி-ம்.)
பொன்: ஆகுயெர். ஞாழற்பூ புலிநகத்திற்குவமை. புலியுகிர் அதனாலாய அணிகலனுக்காகுபெயர்.
குரல் கழுத்திற்காகுபெயர். அமுதம் - ஈண்டு வாயூறல். குமுதம் - செங்கழுநீர் மலர். தத்தை
- கிளி. மழலைக்கிளவு - எழுத்துருவம் பெறாத மொழி. இருநிலம் - இம்மை மறுமை. இருங்கதி
என்றது வீடு போற்றினை.
"எழுபிறப்புந்
தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்" (குறள்.
62) |
என்பவாகலின் இருநிலைத்தின்பமும்
ஒருவழியளிக்கும் இருங்கதிர்ச் சிறுவன் என்றாள், சிறுவன் என்றது ஈண்டு மகன் என்பதுபட
நின்றது.
12
- 14: தழல் . . . . . . . . . . . . . . . புகுதலில்
(இ-ள்)
தழல்விழி மடங்கல் கொலை அரிக்குருளையை - தீப்போன்ற கண்களையும் பிடரிமயிரையும்
கொலைத்தொழிலையுமுடைய சிங்கத்தின் குட்டியை; பொன்மலை கண்ட பொலிவு போல - பொன்மலையின்மேல்
கண்டதொரு காட்சியைப்போல; மணிகெழு மார்பு அகத்து அணிபெறப் புகுதலில் - மணியணிகலன்
பொருந்திய தனது மார்பின்கண் அழகுண்டாகச் செர்த்தி வருதலால் என்க.
(வி-ம்.)
தழல்-தீ மடங்கல்-மடங்கிக் கிடக்கும் பிடரிமயிர். அரிசிங்கம். குருளை-குட்டி. சிங்கக்குட்டி
புதல்வனுக்கும் பொன்மலை தலைவன் மார்பிற்கும் உவமைகள். நம்பெருமான் அரசனாயிருந்தும்
|