பக்கம் எண் :

மூலமும் உரையும்393



செருக்கிலனாய் ஊடியிருக்கும் நின்பால் பாணனை வாயிலாக விடாமலும் பரத்தையரைத் தானே நீக்கி மகனைத் தன் மார்போடணைத்துக் கொண்டு நின்பால் ஆற்றாமை வாயிலாகத் தானே வருகின்றனன். ஆதலால் நீ இன்னும் ஊடியிருத்தற்கிடனின்று என்பது கருத்து.

33 - 35: நின்னுளத் . . . . . . . . . . பாலே

     (இ-ள்) வண்டு ஆரும்அருத்தி அம்கோதை மன்னவன் பால் - வண்டுகள் மெய்க்கின்ற நின்னுடைய அவாவிற்குப் பொருளாய் உள்ள அழகிய மலர்மாலை பூண்ட நம்பொருமான்பால்; நின்உளத்து இன்னல் - நின் நெஞ்சிலே தோன்றியிருக்கின்ற துன்பத்திற்குக் காரணமான ஊடலை; மன்அறக் களைந்து பொருத்தம் காண்டி-முழுதும் அறக்களைந்து அவனோடு ஒற்றுமை கொள்வாயாக என்க.

     (வி-ம்.) அருத்தி - அவா. நின் அவாவிற்குக் காரணமான கோதை என்க. கோதை - மாலை. இன்னல் - துன்பம். துன்பத்திற்குக் காரணமான ஊடல் என்க. மன் - ஆக்கம்; அஃது ஈண்டு முழுதும் என்பதுபட நின்றது. காண்டி - காண்பாயாக. இனி இதனைத் திவலை முதலியன தலைமயக்கும் குன்றத்தையுடைய கூடற்பெருமானாகிய காவிக்களத்தினன் திருக்கண்டார் போல அறம்பூத்த திருவினளே நம்பெருமான் பாணனை இன்றியும் அன்பினர்ப்போக்கியும் செருக்குநிலை ஒருவியும் நம் சிறுவனை மார்பகத்துத் தழுவிக்கொண்டு புகுதலால் இனி அவன்பால நீ கொண்டுள்ள இன்னல்களைந்து அவனொடு பொருத்தங்காண்டி என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.