|
தாகக் கொள்க. மணந்தோர்
- கூடியிருக்கங் காதலர், தணந்தோர் -பிரிந்து தனித்துறையுங் காதலர். புலன்பெறக்
கொடுத்தலாவது பொறிகளுக்குப் புலனாகச் செய்தல். மலையம் - பொதியமலை. தமிழும் தென்றலும்
மலையத்திற் பிறந்து வருதலால் மலையத் தமிழ்க்கால் என்று உரிமை கூறினார். கால்
- ஈண்டுத் தென்றல். புல்லிதழ் - புறவிதழ். பிதுமுகை - நாளரும்பு. நீர்நிலை நாடன்
எனமாறுக. நீ மருதநிலத் தோன்றல் என்றவாறு. எனவே நீ உயர்குடித் தோன்றல் என்றாளாயிற்று.
9
- 12: இவளே . . . . . . . . . . மகளே
(இ-ள்)
இவளே மலை உறைபகைத்து வான்உறைக்கு அணக்கும் - இவள்தானும் மலையில் வீழும் அருவிநீரை
வெறுத்து மழைத்துளிக்கு வாயங்காக்கும்; புட்குலம் சூழ்ந்த - பறவையினங்களாற் சூழுப்பட்ட;
பொருப்புஉடை குறவர் தம் - மலைகளை உறைவிடமாகக் கொண்ட குறவர்கள் ஈன்ற; பெருந்தேன்
கவரும் சிறுகுடி மகள்-பெரிய தேனிறாலை அழித்துத் தேனைக் கவருகின்ற சிறுகடியில் பிறந்த
பெண்ணாவாள் என்க.
(வி-ம்.)
மலையுறை என்புழி உறை நீர்க்கு ஆகுபெயர். வான் உறை என்புழி வான்முகிலுக்கும் உறை நீர்த்துளிக்கும்
ஆகுபெயர். அணத்தல் - அண்ணாந்து நோக்குதல். வானுறைக்கு அணக்கும் புட்குலம் எனவே வானம்பாடி
என்னும் பறவைகள் என்பது பெற்றாம். பொருப்பு - மலை. தசிறுகுடி - குறிஞ்சி நிலத்தூர்கள்.
13
- 14: நீயே . . . . . . . . . . நாட்டினையே
(இ-ள்)
இன்னும்; நீயே ஆயமோடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி - நீயோவெனில் மகளிர் வட்டம்
ஆரவாரிக்கும்படி மரவைரத்தாற் செய்த மருதப்பறையைக் கொட்டி; மாயாநல் அறம் வளர்
நாட்டினை - அழியாத நல்ல அறத்தை வளர்க்கின்ற நாட்டினையுடையோய் என்க.
(வி-ம்.)
ஆயம் - மகளிர் கூட்டம். அரி - மரவைரம். கிணை - மருதப்பறை. அறம் வளர்க்கும் நாடெனவே
மருதநாடு என்பது பெற்றாம்.
15
- 16: இவளே . . . . . . . . . . நாட்டவளே
(இ-ள்)
இவளே தொண்டகம் துவைப்ப தொழில்புனம் வளைந்து - இனி இவளோவென்றால் கறிஞ்சிப்பறை
முழங்கத் தொழில் செய்யப்பட்ட தினைக் கொல்லைகளைச் சுற்றிவந்து; பகடு இனம் கொல்லும்
பழிநாட்டவள் - ஆங்குத் தினைப்பயிர்களைத் தின்னவரும் யானைக் கூட்டங்களைக் கொல்லும்
பழிச்செயலைச் செய்யும் குறிஞ்சி நிலத்தே தோன்றியவள் என்க.
(வி-ம்.)
தொண்டகம் - குறிஞ்சிப்பறை. துவைத்தல் - முழக்குதல். தொழில்- பயிர்த்தொழில்.
புனை - தினைப்புனம். பகடு -
|