|
யானை. பழிநாடு - பழிச்செயலைச்
செய்யும் நாடு. அஃதாவது கொலைத் தொழில் செய்யும் நாடு என்றவாறு. நீயோ அறம்வளர்
நாட்டினை இவளோ பழிவளர்க்கும் நாட்டினள் என்றவாறு.
13
- 14: நீயே . . . . . . . . . . நகரோய்
(இ-ள்)
நீயே எழுநிலை மாடத்து இளமுலை மகளிர் நடம்செய-இனி நீ தானும் வானுறவெழுந்த நிலைமையினையுடைய
மாளிகையிடத்தே இளமையுடைய மகளிர் கூத்தாடாநிற்ப; தரளவடம் தெறும் நகரோய் - அவர்களுடைய
முத்துவடங்கள் அறுந்து சிந்துதற்கிடமாகிய வளமிக்க நகரத்தையுடையோய் என்க.
(வி-ம்.)
எழுநிலை மாடம்: வினைத்தொகை. இனி ஏழு மேனிலைகளையுடைய மாடமுமாம். நடம் - கூத்து.
தரளவடம் - முத்துமாலை.
19
- 20: இவளே . . . . . . . . . . வைப்பினளே
(இ-ள்) இவளே கடம்
பெறு கரிக்குலம் மடங்கல் புக்கு அகழ - இனி இவள்தான் மதத்தையுடைய யானைக் வட்டங்களைச்
சிங்கம் எதிர்ந்து அவற்றின் மத்தகத்தைப் பிளத்தலாலே; தெரித்திடும் முத்தம் திரட்டு
வைப்பினள் - சிதறா நின்ற முத்துக்களைப் பொறக்கிச் சேர்க்கின்ற வன்னிலத்தினள்
ஆவள் என்க.
(வி-ம்.)
கடம்-மதம். கரி - யானை, மடங்கல் - தசிங்கம். வைப்பு-நிலம். நீ நகரத்தையுடையோய்;
இவள் காட்டினள் என்றவாறு.
21
- 22: நீயே . . . . . . . . . . அன்றே
(இ-ள்)
நீயே அணிகெழு நவமணி அலர் எனத் தொடுத்த - இனி நீதானும் அழகு பொருந்திய ஒன்பது
வகைப்பட்ட மணிகளை மலர்மாலை போலத் தூக்கிய; பொன்கொடி தேர்மிசைப் பொலிகவை
- பொன்னாலியன்ற கொடிகளையுடைய தேரின்மேல் ஏறிப் பொலிவுறுகின்ற சிறப்பினையுடையை
என்க.
(வி-ம்.)
நவமணி - ஒன்பதுவகை மணிகள். அவையாவன: கோமேதகம், நீலம், பவளம், புருடராகம், மரகதம்,
மாணிக்கம், முத்து, வயிரம், வயிடூரியம் என்பன. அவர்: மாலைக்கு ஆகுபெயர். மலர்மாலையைத்
தூங்கவிடும் அத்துணை எளிமையாக நவமணி மாலைகளையே தூங்கவிடும் தேர்என அவனுடைய திருவுடைமையைச்
சிறப்பித்த படியாம். தொடுத்தல் - தொங்கவிடுதல். பொன்தேர், கொடித்தேர் எனத்
தனித்தனி கூட்டுக. அன்று ஏ: அசைகள்.
23
- 25: இவளே . . . . . . . . . . . . . . . ஆதலின்
(இ-ள்)
இவளே மணிவாய்க் கிள்ளை துணியாது அகற்ற - இனி இவளோவெனில் அழகிய அலகினையுடைய
|