பக்கம் எண் :

மூலமும் உரையும்399



கிளிகள் தினைக்கதிரைக் கொய்யாமல் ஓட்டுதற்கு; நெடுஇதண் ஏறும் இப்புனத்தினள்- நெடிய பரண்மேலே ஏறும் சிறுமையினையுடைய இத்தினைப் புனத்தின்கண் இருப்பவள்; ஆதலின் - இங்ஙனமிருத்தலின் என்க.

     (வி-ம்.) மணிவாய் - மாணிக்கம் போன்ற அலகுமாம். கிள்ளை - கிளி. துணியாது என்பது துயித்தலின் எதிர்மறை, துணித்தல் - கொய்தல். இதண் - பரண். நீ பொன்தேரில் ஏறும் பெருமையுடையை; இவள் கிளிகடியப் பரண் ஏறும் சிறுமையுடையள் என்றவாறு.

25 - 33: பெரும்புகழ் . . . . . . . . . . . . . . . நசையே

     (இ-ள்) பெரும்புகழ் அணைகுதி ஆயின் - தநீதானும் நின் தகுதிக்கேற்ற பெரிய புகழை அடைய வேண்டினையெனின்; நாரணன் படர தேவர் கெட்டு ஓட - கடல் கடைந்த திருமால் என்செய்கோ எனக் கையற்று வருந்தவும் வடந்தொட்டீர்த்த அமரர்கள் அஞ்சி ஓடாநிற்பவும்; வளிசுழல் விசும்பின் கிளர் முகடு அணவி கருமுகில் வளைந்து பெருகியபோல - காற்றுச் சுழன்று வீசுதற்கிடனான வானத்தினது உயர்ந்த முகட்டினை அளாவி கரிய முகில்கள் சூழ்ந்து பெருனினாற்போன்று; நிலைகெட பரந்த கடல்கெழு விடத்தைமறித்து - தனது அமைதி நிலைமைகெடக் கலக்குண்டு பரவிய திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தடுத்து; அவர் உயிர்பெற குறித்து- அத்திருமால் முதலியோர் உயிருடன் வாழ்தலைக் கருதி; உண்டு அருளி திரு ளம் கறுத்த அருள்பெரு நாயகன் - அள்ளி உட்கொண்டருளித் தனது அழகிய மிடறு கறுத்த அருளையுடைய முதற்கடவுளது; கூடல் கூடினர்போல - மதுரை நகரத்தையடைந்த மெய்யடியார் அவாவறுத்தாற்போல நீதானும்; இவள் கழைத்தோள் நசைநாடல் - இழிகுலத்தாளாகிய இவளுடைய மூங்கிலையொத்த தோளைத் தழுவும் ஆசையை நாடாதொழிக என்க.

     (வி-ம்.) நாரணன் - திருமால். படர்தல் - நினைவான் வருந்துதல். வளி - காற்று. விசும்பு - வானம். கிளர்முகடு - உயர்ந்த முகடு. அணவுதல் - அளாவுதல். நஞ்சிற்கு முகில்கள் உவமை. கடல்-ஈண்டுப் பாற்கடல். அவர் - அந்நாரணன் முதலியோர். களம் -மிடறு களம் கறுத்தமைக்குக் காரணமான அருளையுடைய நாயகன் என்றும் பெருநாயகன் என்றும் தனித்தனி இயைக்க. மதுரையை எய்திய அடியார் நசையை நாடாமையோல நீயும் இவள்தோள் நசையை நாடற்க என்றவாறு. நாடல்: அல்ஈற்று எதிர்மறை வயிங்கோள். இவன் என்றது தலைவியை. கழை-மூங்கில். இச்செய்யுளோடு

"இவளே, கான னண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பொருங்கடல் கலங்கவுள் புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே