பக்கம் எண் :

400கல்லாடம்[செய்யுள்51]



நெடுங்கொடி நுடக்கு நியம மூதூர்
கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே
நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி
யினப்பு ளோப்பு மெமக்குநல னெவனோ
புலவு நாறுதுஞ் செலநின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ வன்றே
யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே"

எனவரும் (நற்றிணை. 45) செய்யுளை ஒப்புக் காண்க.

     இனி நீயே நிலைநீர் நாடன், இவளே சிறுகுடி மகள், நீயே அறம்வளர் நாட்டினை, இவள் பழி நாட்டவள்; நீ நகரோய், இவள் முத்தந்திரட்டு வைப்பினள், நீ தேர்மிசைப் பொலிகுவை, இவள் இதணேறு மிப்புனத்தினள்; ஆதலின், நீ புகழணைகுதியாயின், அருட்பெருநாயகன் கூடல் கூடினர்போல, இவள் தோணசை நாடல் என வினைமுடிவு செய்க, மெய்ப்பாடும் பயனும் அவை.