|
5 - 6: செங்கதிர்........................கடத்த
(இ-ள்.)
செங்கதிர்த் திரள்எழு-ஞாயிற்றினது சிவந்த ஒளித்திரள் தோன்றா நின்ற, கருங்கடல்
போல-கரிய கடல் அலை வீசினாற் போலே; முக்கண்மேல்-ஞாயிறும், திங்களும் நெருப்பும்
ஆகிய மூன்று கண்களினிடத்தும்; பொங்கும் வெள்ளம் எறி-பொங்கா நின்ற மதநீர்ப்
பெருக்கு அலை எறிதற்குக் காரணமான; கடத்த-மத்தகத்தையுடையோய் என்க.
(வி-ம்)
தலைமை பற்றிச் செங்கதிர் என்றாரேனும் இனம் பற்றித் திங்களையும் கொள்க. எனவே
ஞாயிறும் திங்களும் த்யும் ஆகிய முக்கண் என்க. மூன்று கண்களிடத்தும் வெள்ளமாகப்
பெருகி அலை எறிகின்ற மதநீரையுடையோய் என்றவாறு.
7
- 8: பெருமலை....................எயிற்ற
(இ-ள்)
பெருமலைச் சென்னியில்-பெரிய மலையினது உச்சியில், சிறுமதி கிடந்தென-இளம்பிறை
கிடந்தாற்போல; கண் அருள் நிறைந்த-கண்ணின் கண் அருள்நோக்கம் நிரம்பிய (திருமுகத்தின்கண்);
கவின்பெறும் எயிற்ற-அழகுபெற்ற கொம்பினையுடையோய் என்க.
(வி-ம்.)
சிறுமதி-இளம்பிறை இது கொம்பிற்கு உவமை. கண்ணருள் நிறைந்த திருமுகத்தின்கண் எனச்
சொல் வருவிக்கப்பட்டது. கவினிஅழகு. எயிறு-கொம்பு.
9
- 14: ஆறு.......................நெருப்பும்
(இ-ள்)
ஆறு இரண்டு அருக்கர்-பன்னிரண்டு என்னும் தொகையைடுடைய கதிரவர்களின்; அவிர் கதிர்க்
கனலும்-விளங்குகின்ற கதிராகிய நெருப்பும்; வெள்ளை மதி முடித்த செஞ்சடை ஒருத்தன்-வெள்ளிய
பிறையினைச் சூடிய சிவந்த சடையினையுடைய ஒப்பற்றவனாகிய சிவபெருமான்; உடல் உயிர்ஆட
ஆடுறும் அனலமும்-உடலோடு தோன்றி வாழும் உயிர்கள் நடுங்கும்படி கையில் ஏந்திக் கூத்தாடுதற்குக்
காரணமான ஊழித்தீயும்; தென் கீழ்த்திசையோன் தெறுதரு தீயும்- தென் கிழக்குத் திசைக்குத்
தெய்வமாகிய தீக்கடவுள் தன்னைச் சேர்ந்த எல்லாப் பொருள்களையும் அழிப்பதற்குக்
காரணமான நெருப்பும்; உடற்றுபு படர்ந்த சிகை ஊழித்தீயும்-உலகினை அழித்தற் பொருட்டு
யாண்டும் படர்ந்த கொழுந்துகளை யுடைய ஊழித்தீயும்; பாசக்கரகம் விதியுடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம் பெறு முனிவர்-உறிக்கயிற்றில் தங்கிய கரகத்தினையும்
தமக்கென விதிக்கப்பட்ட முக்கோலினையும் முறிக்கலையின் சுருக்கினையும் தம்முடைய கையிற்றாங்கிய
துறவோருடைய; விழி
|