பக்கம் எண் :

மூலமும் உரையும்5



விடும் எரியும் சாபவாய் நெருப்பும்-கண்கள் வெளிப்படுத்துகிற வெகுளித் தீயும் சாபமாகிய வாயிற்றோன்றுகின்ற நெருப்பும் என்க.

     (வி-ம்.) ஆறிரண் டருக்கர் என்றது-ஓர் யாண்டின் அமைந்த பன்னிரண்டு இராசிகளிலும் இயக்குங்கால் ஒவ்வோர் இராசியிலும் இயங்குதல் குறித்து அஞ் ஞாயிற்றினைப் பன்னிருவர் என வழங்குதல் மரபு; அப்பன்னிருவரின் பெயர் வருமாறு. தாத்துரு (சித்திரை) சக்கரன் (வைகாசி) அரியமன் (ஆனி) மித்திரன் (ஆடி) வருணன் (ஆவணி) அஞ்சுமான் (புரட்டாசி) இரணியன் (ஐப்பசி) பகவான் (கார்த்திகை) திவசுவான் (மார்கழி) பூடன் (தை) சவித்துரு (மாசி) துவட்டன் (பங்குனி) என்பன; அவிர்தல்-விளங்குதல்; மதி-ஈண்டுப் பிறை என்பதுபட நின்றது; ஒருத்தன்-ஒப்பற்றவன்: தனியனுமாம்; “தாயுமிலி தந்தையிலி தான் தனியன்” என்றார் மாணிக்கவாசகப் பெருமானும். உடல் உயிர்-உடல் கொண்டு உழலும் உயிர்; அனலம்-நெருப்பு; தென்கீழ்த் திசையோன் என்றது அத்திசைக் காவற்றெய்வமாகிய தீக் கடவுளை, தெறுதரல்-அழித்தல்; ஊழித்தீ-ஊழி முடிவின்கண் உலகினை அழிக்கும் வடவைத்தீ. இது பெண்குதிரை வடிவமாயிருப்பது. இது கடல்நீர் தன் எல்லையைக் கடவாது நிற்றற் பொருட்டு இறைவனால் படைப்புக் காலத்தே படைத்து அக்கடல் நடுவே அமைக்கப்பட்டது என்பர். 12ஆம் அடியை உடற்றுபு படர்ந்து சிகை ஊழித்தீயும் எனப் பிரித்துக் கூட்டிக் கொள்க. படர்ந்து என்னும் செய்தெனெச்சத்தை செய்தவென் எச்சமாகத் திரித்துக் கொள்க. சிகை-கொழுந்து. இதனைச் சுவாலை என்பர் வடநூலார். பாசம்-கயிறு; ஈண்டு உறி என்க. கரகம்-கமண்டலம். விதி-நூல் விதி. முனிவர்க்கென்று விதித்தலையுடைய முக்கோல் என்க.

“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய”
(தொல்-பொருள் மரபியல்)

எனவரும் தொல்காப்பியமும காண்க முறிக்கலைச் சுருக்கு-துண்டிக்கப்பட்ட துணியினது சுருக்கு, இது துறவோருடைய முக்கோலில் சுற்றப்படுவது, இத்துணியை அவிழ்த்து நீருண்ணுதல் முதலிய செய்தற்குத் தம்கையில் சுருக்கிக் கெர்ள்ளுதல் உண்மையின் அதனை ‘முறிக்கலைச் சுருக்கு’ என்றார், முறி-துண்டு, கலை-துணி, சுருக்கு-சுருக்கப்பட்டது, எனவே சுருக்கப்பட்ட துண்டு்த்துணி என்பதாயிற்று, விழிவிடும் எரி என்றது வெகுளித்தீயைச் சாபமாகிய வாய் நெருப்பு என்க,

17-18: நிலை,,,,,,,,,,,,,,,,,,,,,,செவிய

     (இ-ள்) நிலைவிட்டுப் படராது-தத்தம் நிலையினின்றும் விரிந்து செல்லாமல்; காணியில் நிலைக்க-தத்தமக்குரிய இடத்திலேயே நிலை பெற்றிருக்கும்படி; சிறுகாற்று உழலும் அசைகுழைச் செவிய-சிறிய காற்று உலவா நின்ற அசையாநின்ற குழையை அணிந்த திருச்செவிகளை யுடையோய் என்க,

     (வி-ம்.) செஞ்சடை யொறுத்தன் ஏந்தி ஆடும் நெருப்பும், கீழ்த்திசையோன் தீயும், ஊழித்தீயும், முனிவர் சினத்தீயும், சாபத்தீயும்