|
(உரை)
கைகோள் : கற்பு. தோழிகூற்று
துறை: காவற்
பிரிவறிவித்தல்.
(இ-ம்.)
இதனை "தலைவரும் விழுமநிலை எடுத்துரைப்பினும்" (தொல், அகத், 42) எனவரும் நூற்பாவின்கண்
'நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
10
- 13: விடையா . . . . . . . . . . கிரியினும்
(இ-ள்)
விடையா வடந்தைசெய் வெள்ளிஅம் சிலம்பினும் - வருத்தம் செய்யாத வடகாற்றினை விடுக்கின்ற
செம்பினையுடைய பொதிகை மலையினும்; கொண்டல் வந்து உலவும் நீலக்குவட்டினும் - கீழ்காற்று
வந்து உலவுகின்ற நீலமலையிலும்; கோடை சென்று உடற்றும் கொல்லிக்கிரியினும் - மேல்காற்று
வந்து வருத்துகின்ற கொல்லிமலையினும் என்க.
(வி-ம்.)
விடைத்தல் - வருத்துதல். எனவே விடையா என்பது அதன் எதிர்மறை வினையாயிற்று. வடந்தை
- வடகாற்று. வெள்ளிச் கிலம்பு - கயிலைமலை. தென்கால் -தென்றற்காற்று. செம்பின்
பொருப்பு-என்றது பொதியமலையை. பொதியமலையின்கண் செம்பு என்னும் உலோகத்துகள் மிக்கிருத்தல்பற்றி
செம்பற்பொருப்பு எனப்பட்டது. இக் காரணத்தாலே அம்மலையிற் றோன்றும் யாற்றிற்கும்
'தாமிரபரணி' என்னும் பெயர் வழங்குதல் காண்க. கொண்டல் - கீழ்காற்று. நீலக்குவடு
என்றது நீலகிரியை. கோடை- மேல்காற்று. கொல்லிக்கிரி - கொல்லிமலை.
14
- 21: பிறந்தவர் . . . . . . . . . . தோன்றி
(இ-ள்)
பிறந்தவர் பிறவா பெரும்பதி அகத்தும் தன்னிடத்தே பிறந்தவர்கள் வீடு பெறுதலேயன்றி
மீண்டும் பிறவாத பெருமையினையுடைய திருவாரூரிலும்; முடிந்தவர் முடியா மூதூர் இடத்தும் -
தன்னிடத்தே வந்து இறந்தவர்கள் வீடுபெறுதலேயன்றி மீண்டும் பிறந்து இறவாத சிறப்பினையுடைய
பழமையான வடகாசியிலும்; கண்டவர் காணாக் காட்சி செய்நகரினும் - தன்பால் வந்து
கண்டவர் மீண்டும் பிறப்பினைக் காணாமைக்குக் காரணமான மெய்க்காட்சியினைச் செய்கின்ற
தில்லைப் பதியினும்; வேதத் தலையினும் - மறையினுச்சியினும்; விதி ஆகமத்தினும் -
சான்றோரால் விதிக்கப் பட்ட ஆகமங்களினும்; கல்வியர் உளத்தும் - கற்று மெய்யுணர்ந்த
சான்றோர் செஞ்சத்தினும்; குன்றாது இயைந்து-
|