பக்கம் எண் :

404கல்லாடம்[செய்யுள்52]



குறையாமல் பொருந்தி; வெளி உறத்தோன்றி- வெளிப்பட்டுத் தோன்றியும் என்க.

     (வி-ம்.) ஆரூரில் பறிக்க முத்தி, காசியில் இறக்க முத்தி, தில்லையைக் காண முத்தி என்பது பற்றி இங்ஙனம் கூறினார், பிறவாத முடியாத காணாத எனல்வேண்டிய பெயரெச்சத்து ஈறுகள் தொக்கன, பிறந்தவர் விறவாத பெரும்பதி என்றது ஆரூரை. முடிந்தவர் முடியாத மூதூரென்றது வடகாசியை. கண்டவர் காணாத காட்சி செய்நகர் என்றது தில்லையை என்க. கல்வியர் என்றது மெய்ஞ்ஞானக் கேள்வியுடையாரை.

18 - 20: கவர் . . . . . . . . . . கண்ணும்

     (இ-ள்) கவர் நெஞ்சகத்தும் - ஐம்புலக்னளிடத்தும் கவர்பட்டுச் செல்லும் நெஞ்சினிடத்தும்; தெய்வம் விடுத்த பொய் கொள் சிந்தையினும் - மெய்ப் பொருளாகிய தெய்வம் உண்டென் பதையும்விடுத்து மண் பெண் பொன் முதலிய பொய்ப் பொருள்களையே உறுதிப் பொருள்கள் என்று கொள்ளுகின்ற நெஞ்சத்தினும்; கொலையினர் கண்ணும் - கொலைத்தொழில் செய்வாரிடத்தும் என்க.

     (வி-ம்.) (10 முதல் 20 வரையில்) சிலம்பினும் பொரும்பினும் குவட்டினும் கரியினும் பெரும்பதியகத்தும் மூதூரிடத்தும் நகரினும் தலையினும் ஆகமத்தினும் உளத்தும் (20- 21) குன்றாதியைந்து வெளியுறத்தோன்றி எனவும் கொண்டு கூட்டுக. இனி, கவர் நெஞ்சகம் என்பது ஐம்புலன்களிடத்தும் கவர்த்துச் செல்லும் நெஞ்சகம் என்றவாறு. தெய்வம் விடுத்து என்றது மெய்ப்பொருளாகிய தெய்வத்தை உண்டென்பதையும் விடுத்து என்பதுபட நின்றது. பொய்கொள் சிந்தை என்றது மண், பெண், பொன் முதலிய பொய்ப்பொருள்களையே உறுதிப் பொருள்களாகக் கொள்கின்ற சிந்தை என்பதுபட நின்றது.

21 - 22: இருள் . . . . . . . . . . மிடற்றோன்

     (இ-ள்) இருள்உற மறைந்த - இருளுண்டாக மறைகின்ற; விஞ்சை வந்து அருளிய நஞ்சு அணி மிடற்றோன் - வித்தை கைவந்த நஞ்சினை அணிந்த மிடற்றினை யுடையவனது என்க.

     (வி-ம்.) (19 முதல் 20 வரையில்) கவர் நெஞ்சகத்தும் பொய்கொள் சிந்தையினும் கொலையினர் கண்ணும் (20 - 21) இருளுறமறைந்த மிடற்றோன் எனக்கொண்டு கூட்டிக்கொள்க. விஞ்சை - வித்தை. சில இடங்களின் தோன்றிச் சில இடங்களில் மறைதலின் இச்வெயலை வித்தை என்றார்.

23 - 27: சத்தமும் . . . . . . . . . . இடையே

     (இ-ள்) பெருமறைச் சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் - விரிந்த வேதத்திலுள்ள இசைகளும் மொழிகளும் சருக்