|
கங்களும் அடக்கங்களும்;
சின்னக் குறளும் - சிற்றுரு வமைந்த திருக்குறளும்; செழுங்கார்போல முழங்கும் - வளவிய
முகில் போல முழுங்குகின்ற; திருநகர் கூடல் ஒப்புற்று - அழகிய நகராகிய மதுரைக்கு ஒப்பாகி;
அடைமலர் சுமந்த - தழைகளும் மலர்களும் தாங்கா நின்ற; புறம் மை கூந்தல் - முதுகின்கட்கிடந்த
கரிய கூந்தலையும்; வணங்கு கொடி இடை- வளைகின்ற பூங்கொடிபோன்ற இடையினையுமுடைய எம்பெருமாட்டியே
கேள் என்க.
(வி-ம்.)
பெருமறைச் சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் என இயைத்துக் கொள்க. சின்னக்குறள்
என்றது சிறிய உருவத்தாலியன்ற வெண்பாக்களையுடைய திருக்குறளை. எனவே ஆரியர் மறையும்
தமிழ் மறையும் ஒருங்கே முழுங்கும் மதுரை என்றாளாயிற்று. சத்தம் முதலியன நூலுறுப்புக்கள்.
கூடல் ஐம்பொறி இன்பங்களையும் ஒருங்கே உடைத்தாதல் போல ஐம்பொறி இன்பங்களையும்
ஒருங்கே தருபவள் என்பது கருதிக் கூடல் ஒப்புற்று என்றாள். அடை - இலை. மை - கருமை.
வணங்கிடை: அன்மொழித்தொகை.
1
- 9: நடைத் . . . . . . . . . . போலும்
(இ-ள்)
குருசில் - நம்பெருமானுக்கு; நடைதிரை பரவை நால்கடல் அணைத்து- இயங்குதலையுடைய அலையையுடைய
நீர்ப்பரப்பாகிய நாற்றிசைக் கடல்களால் கோலி; வரை அறுத்து - எல்லைப்படுத்தி;
அமைந்த வகை நான்கு ஆக விதிவரதிருத்திய மேதினிப் பொறையை - பொருந்திய கூறு நான்கு
ஆகும்படி இலக்கண விதியுண்டாகச் சான்றோர்களால் திருத்தியமைக்கப்பட்ட நிலமாகிய
சுமையினை; குருமணி விரித்தலின்- தோளணியின்கண் குருவிந்த மணிகள் பதிக்கப்பட்டு
ஒளி பரப்புதலாலும்; தேனொடு கிடந்து மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின் - வண்டுகளோடு
பொருந்தி வாடாமல் தொடுக்கப்பட்ட நறுமணமுடைய மலர்மாலைகளைச் சுமத்தலாலும்; மலைகள்
இவை என - கண்டோர் இவைகள் மலைகள் என்று சொல்லும்படி; நிறுத்திய திருவுறை பெருந்தோள்
தரித்தும் - பகைவரை வென்று நிரல நிறுத்தப்பட்ட வெற்றித்திரு உறைகின்ற தன்னுடைய
பெரிய தோளினிடத்தே தாங்கியும்; அணைத்தும்- தழுவிக்கொண்டும்; தான் எனக் கண்டும்
- அந்நிலத்தின்கண் வாழும் உயிர்களைத் தன்னுயிர் என்றே நினைந்தும்; செய்ததும்
அன்றி - இதுகாறும் பாதுகாத்தற் றொழிலைச் செய்து வந்ததுமல்லாமல்; திருமனம் பணைத்து
- தனது அழகிய நெஞ்சம் ஊக்கங்கொண்டு; காக்கவும் கருத்து உறும் போலும் - இந்நிலத்தினைப்
பகைவர்கைபற்றா வண்ணம் பாதுகாக்கவும் ஒரு கருத்தினைக் கொண்டுள்ளான் போல்கின்றனன்
என்க.
|