|
வினைபோல் - இரண்டு
திருவடிகளையும் நெஞ்சத்தில் இருத்திபோகிருந்தவர்களுடைய வினைகள் ஒழிந்தாற்போல
என்க.
(வி-ம்.)
முனிவர் நால்வரென்றது - சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனச்சுசாதர் என்பவர்.
அறமுதல் நான்கும் என்றது - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கனையும்,
இறைவன் கல்லாலின் நீழலிலிருந்து சனகர் முதலிய முனிவர்க்கு அறமுதலிய நாற்பொருளையும்,
உணர்த்தியதனை,
"கல்லாலி னீ
ழறனி லொருநால் வார்க்கு
கடவுணீ யுணர்த்தியதுங் கைகாட் டென்றாற்
சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மை
துரும்புபற்றிக் கடல்கடக்கும் துணிபே யன்றோ." |
எனத் தாயுமானாரும்.
"கல்லாலின்
புடையமர்ந்து நான் மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாம
னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்" |
எனப் பரஞ்சோதி முனிவரும்
அருளிய பாடல்களான் உணர்க. இருந்தவர்-
போகிருந்தவர் என்க. வினை - இருவினைகளும்.
20
- 21: போயின . . . . . . . . . . தருமே
(இ-ள்)
போயின துனைவினை நோக்கி ஏகின எனக்கு அற்புதம் தருமே- ஒழிந்துபோன விரைவினை ஆராயுமிடத்து
நின்னைப் பிரிந்துசென்ற எனக்கு வியப்பைத் தாரா நிற்கும் என்க.
(வி-ம்.)
(5) வெப்பம் (20) போயின துனைவினை நோக்கி எனக்கு அற்புதம் தரும் என்க. துனைவு
- விரைவு. நோக்கி என்னும் செய்தெனெச்சத்தைச் செயவென் னெச்ச மாக்குக. அற்புதம்
- வியப்பு.
இனி இதனை வடிவினளோ!
நிற்பிரிந் திறந்துபோகுங் கடுஞ்சுரந் தந்த கல்லதர் வெப்பமானது நின் பெருமுலை மூழ்க
வென்னுள்ளத் தினிற் றொடாமுன் வடற்பெருமா னீடருண் மூழ்கி யிருபதமுள் வைத்திருந்தவர்
வினைபோற் போயின துனைவினை நோக்கி, ஏகினவெனக்கே யற்புதறந் தருமென வினைமுடிவு செய்க.
மெய்ப்பாடும் பயனும் அவை.
|