|
குரும்பை - பனங்குரும்பையுமாம்.
மூழ்குதல் - தழுவித் திளைத்தல். உளத்தினில் என்புழி ஏழனுருபு மூன்றாவதன்கண் மயங்கிற்று
தொடுதல் - ஈண்டு நினைத்தல்.
10
- 12: வீழ் . . . . . . . . . . போல
(இ-ள்)
வீழ் சுற்று ஒழுக்கிய பராரை திருவடக் குளிர் நிழல் இருந்து-விழுதுகளைத் தன்னைச் சூழ
இறக்கிய பரிய அடிப்பகுதியையுடைய அழகிய கல்லாலின் குளிர்ந்த நிழலின்கண் வீற்றிருந்து;
குணச்செயல் மூன்றும் உடலொடு படரும் நிலை - இராசதம் முதலிய மூன்று குணங்களின் செய்கைகளும்
உடலோடு செல்லுகின்ற நிலைமையினையுடைய; நிழல் போல - நிழலின் தன்மைபோல என்க.
(வி-ம்.)
வீழ் - விழுது. பருஅரை - பராரை எனப் புணர்ந்தது. வடம் - ஆலமரம். குணம் - இராசதம்,
தாமதம், சாத்துவிகம் என்பன. இக்குணங்கள் உடலைத் தொடரும் நிழல்போல உயிரைத்
தொடர்வன என்பது கருத்து.
13
- 16: நீங்கா . . . . . . . . . . அகற்றி
(இ-ள்)
நீங்கா பவம் தொகை - நீங்காத பிறவிக்கு ஏதுவாகிய வினைக்கூட்டம்; நிகழ்தற்கக்
காரணமான உட்கருவிகள் நான்கும்; உடன் நிறைந்து - தம் முடனே அநாதியாயிருந்து; ஒழியா
உள்பகை ஐந்தும் - நீங்குதலில்லாத உட்பகைகள் ஐந்தும்; மதிஞரின் பழித்த வடுஇரு மூன்றும்
- அறிஞர்களால் பழிக்கப்பட்ட காமம் முதலிய கற்றங்கள் ஆறும்; அணுகாது அகற்றி -
தம்மை நெருங்காமல் விலக்கி என்க.
(வி-ம்.)
பவம் - பிறப்பு. குணச்செயல் மூன்றும் நீங்காப் பவம் என்க. தொகை- என்றது ஈண்டு
வினைக்கூட்டத்தை. முதல் - காரணம். முதல் நான்கும் என்றது மனம், சித்தம், புத்தி,
அகங்காரம் எனும் உட்கருவிகளை. உட்பகை ஐந்தும் என்றது அவிச்சை, அகங்காரம், அவா,
விருப்பு, வெறுப்பு என்பனவற்றை. மதிஞர்-அறிஞர். வடு - குற்றம். அறுவகைக் குற்றங்களாவன
: காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்ச்சரியம் என்பன.
16
- 19: பணி . . . . . . . . . . போற்
(இ-ள்)
பணிமுனி நால்வர்க்கு அறம் முதல் நான்கும் பெற அருள்செய்த- தன்னை வணங்கிய முனிவர்
நால்வர்க்கும் அறம் முதலிய உறுதிப்பொருள் நான்கும் உண்டாகும்படி குறிப்பாய் அறிவுறுத்திய;
கூடல் பெருமான் நீடு அருள் மூழ்கி-மதுரையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய அழிவில்லாத
திருவருட் கடலில் முழுகி ; இருபதம் உள்வைத்து இருந்தவர்
|