|
பாடியும் - வெண்மையான
பக்கங்களையுடைய எருக்கமலரிடத்தே வளர்கின்ற உழை என்னும் பண்ணைப் பாடியும்; கூவிளங்கண்ணியில்
குலக்கிளை முரற்றியும்- வில்வமாலையில் சிறந்த கைக்கிளை என்னும் பண்ணைப் பாடியும்;
வெண் கூதளத்தின் விளரி நின்று இசைத்தும் - வெள்ளிய கூதள மலரில் விளரி என்னும்
பண்ணை ஒழிவின்றிப் பாடியும்; உமிழ் நறவு அருந்தி - அம்மலர்கள் வெளிப்படுத்துகின்ற
தேனை உண்டு; உறங்கு செஞ்சடையோன் - இன்புற்றுத் துயிலுதற்கிடனான சிவந்த சடையினையுடையவனும்
என்க.
(வி-ம்.)
துணர்-கொத்து. செவ்வழி, உழை, கிளை, விளரி என்பன பண்வகைகள். வண்டு, தேன், ஞிமிறு,
சுரும்பு என்பன வண்டு வகைகள். கொன்றை, எருக்கு, கூவிளம், கூதளம் என்பன சிவபெருமான்
சூடும் மலர்கள். வாலுழை என்புழி உழை பக்கம் வெள்ளெருக்காதலின் வாலுழை எருக்கு என்றார்.
நறவு-தேன். உறங்குடற் கிடனான செஞ்சடை என்க.
7
- 9: மது . . . . . . . . . . காலினன்
(இ-ள்)
மதுமலர் பறிந்துத் திருவடி நிறைத்த - தேன் மிகுந்த மலர்களைக் கொய்து தன் அழகிய
அடியின்கண் இட்டு வழிபாடு செய்து நிரப்பிய; நால்மறை பாலனை- நான்கு மறைகளையும் ஓதிய
அந்தணச் சிறுவனாகிய மார்க்கண்டனை; நலிந்து உயிர் கவரும் காலனை - வருத்தி உயர்
கவர்தலுற்று கூற்றுவனை; காய்ந்த காலினன்- வெகுண்டு உதைத்த திருவடிகளையுடையவனுமாகிய
சோமசுந்தரக் கடவுளினது என்க.
(வி-ம்.)
மது - தேன். மலர்களைப் பெய்து வழிபடுமாற்றால் நிறைந்த பாலன் என்க. பாலன் - ஈண்டு
மார்க்கண்டன். காலன் - கூற்றுவன். சினந்துதைத்த கால் என்க.
9
- 13; கூடல் . . . . . . . . . . ஒருத்தியை
(இ-ள்)
வடல் திருமருங்கு அணைந்து வரும் - மதுரைமாநகரினது அழகிய பக்கத்தே சேர்ந்து பெருகி
வருகின்ற; வரை புரண்டு என்ன திரை நிரை துறை அகத்து-மலைகள் புரளமாறு போலே புரள்கின்ற
அலைகளினது வரிசையினையுடைய நீராடு துறையின்கண்; அணந்து எடுத்து ஏந்திய அருப்பு முகிழ்
முலையோள் - அண்ணாந்து உயர்ந்து நிமிர்ந்த கோங்கரும்பினை ஒத்த குவிந்த முலையினையுடையாளாகிய;
மதிநுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை-பிறைபோன்ற நெற்றியையும் நிறைத் திங்கள்
போன்ற மலர்ந்த மகத்தினையுமுடைய ஒரு பரத்தையை என்க.
|