பக்கம் எண் :

மூலமும் உரையும்417



     (வி-ம்.) மருங்கு-பக்கம். திரு - செல்வமுமாம். முகிழ்தல் - குவிதல். இளமதி -பிறைத் திங்கள். பெருமதி - தநிறைத் திங்கள், ஒருத்தி என்றது பரத்தையை.

14 - 22: ஆட்டியும் . . . . . . . . . . போல

     (இ-ள்) ஆட்டியும் - நீராடுவித்தும்; அணைத்தும் - மார்போடணைத்தும்; கூட்டியும் -தொழிகளோடு சேர்த்தும்; குலவியும் - கொண்டாடியும்; ஏந்தியும் - தாங்கியும்; எடுத்தும் - தூக்கியும்; ஒழுக்கியும் - நடப்பித்தும்; ஈர்த்தும் - இழுத்தும்; முழுக்கியும்-நீரில் முழுகுவித்தும்; தபுத்தியும்-மேலே எடுத்தும்; முலைஒளி நோக்கியும் - அவள் குளிரால் நடுங்குங்கால் அந்நடுக்கந்தீரக் கட்டியணைத்தும்; பூசியும் - சாந்த முதலியவற்றை அவள்மேற் பூசியும்; புனைந்தும் - மாலை முதலியவற்றை அணிந்தும்; பூட்டியும் - அணிகலன்களைப் பூட்டியும்; சூட்டியும் - கண்ணி முதலியவற்றைச் சூட்டியும்; நிறுத்தியும் - அவள் ஊடாதபடி நிறுத்தியும் நிறைத்தும் - அவள் நெஞ்சத்தை உவகையால் நிரப்பியும்; நெறித்தும்-அவள் கூந்தலை அறல்படச் செய்தும்; செறித்தும் - தன் மார்போடு அணைத்தும்; எழுதியும் - தொய்யிலெழுதியும்; தப்பியும்- எழுதுங்கால் பிழைத்தும்; இயைத்தும் - தமீண்டும் திருத்தியும்; பிணித்தும் - கச்சைக் கொங்கையில் கட்டியும்; கட்டியும்-துகிலை உடுத்தும்; கலத்தியும் - தன் நெஞ்சத்தோடு ஒன்றுபடச் செய்தும்; கமழ்த்தியும் - பனிநீர் முதலியவற்றால் நறுமணங்கமழச் செய்தும்; மறைத்துச் செய்தன எல்லாம்-நாம் அறியாமல் மறைத்து இவ்வாறு தாம் செய்த கற்றங்களெல்லாம்; செய்யலர் போல - செய்ாதவரைப் போன்று என்க.

     (வி-ம்.) ஆட்டுதல் - நீராடச் செய்தல், கூட்டுதல் - தோழி மாரோடு சேர்த்தல். தன்னோடு சேர்த்தல் எனினுமாம். குலவுதல் - கொண்டாடுதல். ஒழுங்குதல்- நடப்பித்தல். விளிமொழி - அழைக்கும் சொல். விதலை - நடுக்கம். திளைத்தல் - கட்டியணைத்தல். நிறுத்துதல் - தன்வழிப் படுத்தல். கலத்துதல் - கலக்கச் செய்தல். கமழ்த்தல்- நறுமணம் கமழச் செய்தல்.

22 - 23: என் . . . . . . . . . . உறையுளில்

     (இ-ள்) என் பொன் நெடுஇலை பொலிந்த - என்னுடைய நெடிய பொற்றகட்டால் விளங்கிய; திருநிறை உறையுளில் - செல்வம் நிறைந்த இம்மாளிகையின்கண் என்க.

     (வி-ம்.) கணவனடைய அயன்மை தோன்ற என் உறையுள் என்றாள். பொன் நெடுஇலை என மாறுக; பொன்னால் இயன்ற நெடிய