பக்கம் எண் :

418கல்லாடம்[செய்யுள்54]



இலை வடிவமான ஒப்பனையால் பொலிந்த உறையுள் என்க. உறையுள் - இல்லம்.

36 - 37: நிறை . . . . . . . . . . கேட்டி

     (இ-ள்) நிறைநீர் விடுத்து - தமக்குரிய மேன்மைக் குணங்களைக் கைவிட்டு; செறிந்தது - எம்மை நெருங்கி வந்தது; என் எனக் கேட்டி, என்ன காரணமோ என்று நீ கேட்பாயாக என்க.

     (வி-ம்.) நிறைநீர் - நிறைந்த பண்பு. அஃதாவது அன்பு முதலியன. எம்பால் அன்பில்லாதிருந்தும் எம்மில்லத்திற்கு வந்த காரணம் யாது என நீ கேட்டறிவாயாக என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியபடியாம். இனி இதனை மறி நோக்கினளே பெருநீரூரர் செஞ்சடையோனும் காலினனுமாகிய சோமசந்தரக் கடவுளினது கூடல் மருங்கணைந்து வரும்புனல் வையைத்துறையகத்து மலர் முகத்தையுடைய ஒரு பரத்தையை யாமறியா வண்ணம் மறைத்துச் செய்தனவெல்லாம் (யாம் அறிந்திருக்கவும்) செய்யாதார் போன்று என் உறையுளிற் செறிந்தது என்! எனக் கேட்டி என வினைமுடிவு செய்க.