பக்கம் எண் :

மூலமும் உரையும்451



(உரை)
கைகோள். களவு. தலைவன் கூற்று

துறை: முகங்கண்டு மகிழ்தல்.

     (இ-ம்.) இதற்கு, "முன்னிலை யாக்கல்" (தொல். களவி. 10) எனவரும் நூற்பாவின்கண் 'நன்னய முரைத்தல்' எனவரும் விதி கொள்க.

1 - 3: நிறைமதி.................புரையாது

     (இ-ள்) தேரான் தெளிவு எனும் - தேராள்றெளிவு என்னும் முதற்குறிப்பையுடைய; திருக்குறள் புகுந்தும்- திருக்குறளின் பொருளை ஆராய்ந்தறிந்தும்; மதிகுறை மனனே-அறிவு குறைந்த என் நெஞ்சமே கேள் (இவள் முகமதிக்கு) நிறைமதி புரையாது நிறைமதி புரையாது-முழுத்திங்கள் என்றும் ஒவ்வாது முழுத்திங்கள் எத்துணையும் ஒவ்வாது நிறைமதி புரையாது - முழுத்திங்கள் எவ்வாற்றானும் ஒவ்வாது காண் என்க.

     (வி-ம்.) தேரான் தெளிவெனும் திருக்குறள்-"தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந், தீரா விடும்பை தரும்" (குறள்.) எனவரும் திறக்குறள். நீ ஆராயாமல் இவள் முகத்தை நிறைமதி ஒக்கும் என்கின்றனை. ஆதலால் நினக்குக் கற்றிருந்தும் அறிவில்லை என்றவாறு. தெளிவுபற்றி மும்முறை அடுக்கினான். இனி மேலே அத்திங்கள் ஒவ்வாமைக்கும் காரணம் கூறுகின்றான் என்க,

4 - 7 : உவர்க்கடல்......................கறுத்தும்

     (இ-ள்) உவர்கடல் பிறந்தும்-இத்திங்களோ வெனில் உப்புக்கடலிற் பிறந்தும்; குறைஉடல் கோடியும் - நாளதொறும் தேய்கின்ற தன் உடலானது கூனியும்; கரு கவை தீ நா பெரு பொறி பகுவாய் தழல்விழி பரந்தள் - கரிய பிளவுள்ள நெருப்புமிழ்கின்ற நாக்கையும் பெரிய புள்ளி பரந்த பிளந்த வாயையும் கனலும் கண்களையுமுடைய இராகுவென்னும் பாம்பினால்; இரைமாந்தியம்- இரையாக உண்ணப்பட்டும் மிச்சில் உமிழ்ந்து-மிச்சிலாக உமிழப்பட்டும்; மெய்உள் கறுத்தும் தன உடலினுள்ளே மறுப்பட்டும் என்க.

     (வி-ம்.) திங்கள் உவர்க்கடல் பிறந்தது என்றதனால் தலைவியோ ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடிப் பிறப்பினள் காண் என்றானானும். திங்கள் குறைஉடல் கோடியும் என்றதனால் தலைவியோ எழுச்சியுடைய நேரிய உடல் படைத்தவள் என்றானாம். திங்கள் பாம்பால் பற்றப்பட்டு உமிழப்படும் என்றதனால் தலைவி எஞ்ஞான்றும் தீயோராற் றீண்டப்படாத தூயவள் என்றானாம். திங்கள் களங்கமுடைத்தெனவே தலைவி வசை சிறிதும் இல்லாதாள் என்றானாம். உவர்-