|
உப்பு. கோடுதல்-கூனுதல், தழல்விழி-வினைத்தொகை. பாந்தள் தான்-என்புழிதான்: அசை. பாந்தள்-பாம்பு. அஃதாவது இராகுக்கோள், மாந்தல்-உண்ணுதல். உமிழ்தல் என்றதனால் மிச்சில் என்பது பெற்றாம்.
8
- 10: தணந்தோர்ச் .............................. இகந்தும்
(இ-ள்) தணந்தோர் சினந்தும் - தம்முட் பிரிந்த காதலர்களை வெகுண்டு வருத்தியும்; மணந்தோர்க்கு அளித்தும் - மம்முட் கூடியுள்ள காதலர்க்குத் தண்ணளி செய்தும் குமுதம் அலர்த்தியும்-குமுதமலரை மலரச்செய்தும்; கமலம் குவித்தும்- தாமரை மலரைக் கூம்பச்செய்தும்; கடல்சூழ் உலகில் - இங்ஙனம் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகத்தின்கண்; மதிநடு இகந்தும் - தன தறிவின்கண் நடுவுநிலைமையை விலக்கியம் (மதிநடு இகந்தும்-திங்களின் நடுவே மறைந்தொழிந்தும்); என்க.
(வி-ம்.) தணந்தோரைச் சினத்தலும் மணந்தோரை அளித்தலும் குமுதத்தை அலர்த்தலும் கமலத்தைக் குவிததலும் ஆகிய இச்செயல்கள் நடுநிலையற்ற செயல் ஆதலின் திங்கள் இக்குறைபாடுடைத்து. தலைவியோ இக்குறை சிறிதும் இலள் எனத் திங்கட்கும் தலைவிக்கும் வேறுபாடுணர்த்தியபடியாம். இன்னும் தலைவி குமுதமாகிய கண்ணையும் தாமரையாகிய முகத்தையும் ஒருசேர மலர்த்துவாள்காண் என்றானுமாயிற்று. மதிநடு இகந்தும் என்றதற்கு அறிவின்கண் நடுநிலைமையை யகற்றியும் எனவும் திங்களின் நடுவில் மறைந்தும் எனவும் சிலேடை வகையாற் பொருள் காண்க. மதி - அறிவு; திங்கள், (மாதம்).
(இ-ள்) பெருமறை கூறி அறை-விதிதோறும் பெரிய வேதங்கள் வெளிப்படுத்துக் கூறி முழங்குகின்ற விதிகளெல்லாம்; முத்தழற்கு உடையோன் முக்கண் கடவுள் என்று-மூன்றாகிய வேள்வித்தீக்குத் தலைவன் மூன்று கண்களையுடைய சிவபெருமானே என்று; அறுத்திடும் வழக்கு கிடக்க-வரையறுத்துக் கூறும் முறைமை ஒருசார் இருக்க என்க.
(வி-ம்.)
முதல் நூலாதலான் வேதத்தைப் பெருமறை என்றான். சொல்லி உணர்த்தும் விதி என்பார்
கூறி அறைவிதி என்றார். உடையோன்-ஈண்டுத் தலைவன் என்பதுபட நின்றது. முத்தீ-ஆகநீயம்,
தக்கணாக்கிநி, காருகபத்தியம் என்பது. முக்கண்-திங்களும் ஞாயிறுங் தீயுமாகிய மூன்று
கண்கள். அறுத்தல்-வரையறை செய்தல்.
|