பக்கம் எண் :

மூலமும் உரையும்453



11 - 13: பெருமறை ................................. கிடக்க

     (இ-ள்) ஒருகால் - பண்டொரு காலத்தே; வான்வர நதிக்கரை - வானத்தினின்றும் இறங்கிய வரந்தரும் இயல்புடைய கங்கைப் பேரியாற்றின் கரையிடத்தே; மருள்மகம் எடுத்த தீ குணம் தக்கன் - தனது அறியாமையால் வேள்வி செய்யத் தொடங்கிய தீய குணத்தையுடைய தக்கனுடைய என்க.

     (வி-ம்.) வரநதி - வரந்தரும் இயல்புடைய கங்கையாறு, மருள் - அறியாமை. மகம் - வேள்வி.

15 - 24: செருக்களம் ............................. புரையாது

     (இ-ள்) செருக்களந் தன்னுள் - போர்க்களத்தின்கண்; கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும-கணுக்கள் தோறும் சிதறிய கரும்பின் முத்துக்களும்; வளைஉமிழ் ஆரமும்-சங்களீன்ற முத்துக்களும்; சுரிமுகச் சங்கும் வலம்புரிக் கூட்டமும்; சுரிந்த முகமுள்ள இடம்புரிச் சங்குகளும், வலம்புரிச் சங்கின் கூட்டமும்; சலஞ்சலப் புஞ்சமும் -சலஞ்சலம் என்னும் சங்குக் கூட்டமும்; நந்து இனக் குழுவும் - இப்பி என்னும் சங்குக் கூட்டமும் வளம்வயின் நந்தி-வளமுற்ற இடங்களிலே பெருகி; உழவக்கணத்தர் படைவாள் நிறுத்தம்-உழவர் கூட்டத்தார் உழாநின்ற கலப்பைக் கொழுவைத் தடுக்கும் மருதம் சூழ்ந்த; கூடற்கு இறைவன் மதுரைப் பெருமானது; குரைகழல் படையால்- முரலுகின்ற வீரக்கழலணிந்த திருவடியாகிய படைககலத்தால்; ஈர் எண் கலையும் பூழிபட்டு உதிர-தன்னுடைய பதினாறு கலைகளும் துகளாகி யுதிரும்படி; நிலனொடு தேய்ப்புண்டு-நிலத்தோடு தேய்க்கப்பட்டு; அலமந்து அலறியும் - புகலிடங் காணாது நெஞ்சு சுழன்று கதறியும்; சிதைந்து உழைந்து எழும்-அழிந்து சாகாதிருந்து பின்னர் நாணமின்றி எழாநின்ற; பழி தீ மதி புரையாது . பழியினை யுடைய தீய இத்திங்கள் நந்தலைவியின் முகத்தை ஒவ்வாது காண்! என்க.

     (வி-ம்.) தக்கன் போர்க்களத்தில் இறையோன் குரைகழற்படையால் தேய்ப்புண்டு அலறியும் இவ்வாறு பல்வேறு பழிகளையுடைய மதி ஒவ்வாது என்றவாறு. செருக்களம்-போர்க்களம். கண்-கணு. கருப்புத் தரளம்-கரும்பிற் பிறக்கும் முத்து, வளை-சங்கு. வலம்புரிக் கூட்டம் எனப் பின் கூறுதலால் சுரிமுகச் சங்கு, நந்து என்றது இப்பியை. குரைகழல்-அன்மொழித்தொகை. சிதைந்து உறைந்து என்றது இங்ஙனம் சிதைந்தும் சாகாதிருந்து என்பதுபட நின்றது. எழும் என்றது நாணமின்றி எழும் என்பதுபட நின்றது. தீ மதி - தீய மதி. புரைதல் - நிகர்த்தல்.

25 - 29: முண்டகம்............................மதிக்கே

     (இ-ள்) முண்டகம் விளர்த்தி-செந்தாமரைப் பூவை வெளுக்கச் செய்து; முதிராது அலர்ந்தும்-முதிர்ந்து வாடாமல்