|
பெற்ற மெய்யடியார்க்கு; ஒருகால் தவறா உடைமைத்து என்ன - ஒரு காலத்திலும் தப்பிப்போகாத பொருள்போல; பிரியாக் கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த- தன்னைவிட்டு நீங்காத கற்பென்று சொல்லுகின்ற நிறையோடு வளர்ந்த; நெடுங்கயல் எறிவிழி - நெடிய கயல்மீனைத் தோற்பிக்கும் விழிகளையும்; குறுந்தொடி - சிறிய தொடியையுமுடைய; திருவினள் - திருமகளை ஒத்த நம் மகள்; ஒருகால் உளத்து தெய்வம் என்று தெயிளவும் ஒலள் - ஒரு காலத்திலேனும் தன் நெஞ்சத்தில் தன் கணவனையன்றி வேறுதெய்வம் உண்டு என்று ஆராயவும் நினைத்தல் இலள் என்க.
(வி-ம்.) பிறைச் சடைமுடியினன் - சிவபெருமான். நிறை-நெஞ்சை நிறுத்தும் ஆற்றல். திரு-திருமகள்.
18 - 20: பல....................... படரினும்
(இ-ள்) பல உயிர் தழைக்க-உலகத்திலுள்ள பலவேறு உயிர்களும் தழைக்கும்படி; ஒருகுடை நிழற்றும் - ஒரு குடையால் தண்ணளி செய்கின்ற; இருபுல வேந்தர்- இருவேறு நாட்டு மன்னர்களுள்; மறுபுலம் விளைந்த பெரும்பகை-வேறொரு நாட்டின் பொருட்டு விளைந்த பழம் பகைமையை; நீர்வடு பொருவ நிறுத்திடப் படரினும்-நீரின்கண்ணுண்டான பிளவு விரைந்து ஒன்றுபட்டு மறைந்தாற்போல மறையும்படி நீக்கி அவர்களைச் சந்து செய்ய அவள் கணவனாகிய அரசன் சென்றாலும் என்க.
(வி-ம்.) இருபுலம் - இரண்டு நாடு. பெரும்பகை - பழைய தான தீராப்பகை. இத்தகைய பகைமை கொண்டுள்ள மன்னர்களைச் சந்து செய்தல் பலநாள் முயன்று செய்தற்குரிய காரியம் ஆகவே செயற்கரும் செயலுக்கு ஈண்டு ஒன்றை எடுத்துக் காட்டியபடியாம். நீர்வடு பொருவ - நீரில் உண்டாக்கிய வடுதோன்றிய இடம் தெரியாமல் மறைந்து போவதுபோலப் பகைமையைப் போக்கிச் சந்து செய்தல் என்க.
21 - 25: ஏழுயர்....................... களிறே
(இ-ள்) ஏழ்இரட்டி உயர் மதலை நட்டு - பதினான்குமுழம் உயர்ந்துள்ள தூண்களை நிறுத்தி; அமைத்த தன் பழங்கூடம் தனிநிலை அன்றி - இயற்றப்பட்ட தனது பழைமையான கூடமாகிய ஒரே யிடத்தல்லாமல்; அவன் கட களிறு அத்தலைவன் வினைமேற் கொண்டுழி ஊர்ந்து செல்லும் மதயானையானது; உடுநிறை வானம் பெருமுகடு உயரச் செய்யும் ஓர்கூடம்- மீன்கள் நிறைந்த வானைத் தீண்டும்படி பெரிய முகட்டினை உயர்த்தி இயற்றப்பட்ட பிறிதொரு கூட்டத்தில்; புணர்த்தின்-
|