|
கட்டினால்; நெய்ம்மிதி
உண்ணாது - நெய்யொடு கலந்த கவளத்தை உண்ணமாடடாது என்க.
(வி-ம்.)
நம்மகள் கணவனாகிய அரசன் செயற்கருஞ் செயலாகிய சந்து செய்தலை மேற்கொண்டு செல்லினும்,
அவன் ஊர்ந்து செல்லும் களிறு அன்றே மீண்டு வந்து தன் கொட்டிலில் கவளம் உண்பதல்லது
வேறொரு கொட்டிலில் நின்று கவளம் உண்ணமாட்டாது என்றவாறு, எனவே தலைவன் மேற்கொள்ளும்
செயல் எத்தகைய அருஞ்செயலயினும் இடையூறின்றி அன்றே நிறைவுறும் என்றாளாயிற்று. தலைவன்
இங்ஙனம் சிறப்புறுதற்குக் காரணம் நம் மகளின் கற்புடைமையே காண் என்றவாறு. யானை
ஏழுமுழம் உயரமுடையது. ஆகவே அதற்கியற்றும் கொட்டிலுக்குப் பதினான்கு முழத்தூண் நடுதல்
வேண்டிற்று. மதலை - தூண். நெய்ம்மிதி - நெய்கலந்து மிதித்தியற்றிய கவளம்.
இதனை,
காற்படைக் கொடியினன் புண்ணியக் குன்றம் புடைபொலிகூடற் சடைமுடியுனன் பேரருளடியவர்க்குத்
தவறாஹபடைமைத்தென்ன, பிரியாக் கற்பெனு நிறையுடன் வளர்ந்த திருவினளுளத்தில் பிறதெய்வமுண்டெனத்
தெளிந்தில ளாதாலால், தலைவன் வேந்தர் பெரும்பகையை நீர்வடுப்பொருவ நிறுத்திடப்
படரினும் அவன் களிறு தன் பழங் கூடத்தன்றிப் பிறிதொரு கூடம் புணர்த்தின் நெய்ம்திதி
யுண்ணாதென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|