|
25
|
|
முற்றவம்
பெருக்கு முதற்றா பதர்க்கு
நின்றறிந் துணர்த்தவுந் தமிழ்ப் பெயர் நிறுத்தவு
மெடுத்துப் பரப்பிய விமையவர் நாயகன் |
|
30
|
|
மெய்த்தவக்
கூடல் விளைபொருண் மங்கையர்
முகத்தினுங் கண்ணினு முண்டக முலையினுஞ்
சொல்லினுந் தொடக்கும் புல்லம் போல
வெம்மிடத் திலதா லென்னை
தம்முளந் தவறிப் போந்ததிவ் விடனே |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவிகூற்று
துறை: பள்ளியிடத்
தூடல்
(இ-ம்.)
இதற்கு "அவனறிவு" (தொல். கற்பி) எனவரும் நூற்பாவின்கண் 'செல்லாக்காலைச் செல்கென
விடுத்தலும்' எனவரும் விதிகொள்க.
1
- 5: நீரரமகளிர்.................................... தாமரை
(இ-ள்)
நீர் அர மகளிர்-நீரில் வாழும் தெய்வ மகளிர்; நெருங்குறப் புகுந்து கண்முகங் காட்டிய
காட்சியது என்ன - நெருங்கப் புகுந்து தம்முடைய கண்களையும் முகத்தையும் காட்டுகின்ற
தோற்றத்தைப்போல பெருங்குலை மணந்த நிறைநீர் சிறைப்புனல்-பெரிய கரை செறிந்த
நிறைவுங்ளள நீரைத் தடுத்து நிறுத்தப்பட்ட குளத்தின்கண்; மணிநிறப் பாடம் முதுகுஇடை
அறப்பூத்து-மணி நிறத்தையுடைய படாம் போர்க்கப்பட்டாற் போன்ற அழகிய முதுகின்கண்
இடையின்றி மலர்ந்து; சுரும்பொடு கிடந்த சொரியிதழ் தாரை - வண்டுகளோடே இருந்தேன்
சொரியும் அகவி தழையுடைய தாமரைப் பூவை என்க.
(வி-ம்.)
நீரரமகளிர் - நீரில் வாழும் ஒருவகைத் தெய்வ மகளிர். சூலை-செய்கரை, படாம்-ஆடை.
இடை-இடைவெளி. முதுகு - ஈண்டு மேற்பரப்பு. சுரும்பு-வண்டு. தேன் சொரி தாமரை-இதழ்த்தாமரை
எனத் தனித்தனி கூட்டுக. தாமரைக்கு நீரர மகளிரின் கண்களும் முகமும் உவமை.
6
- 9: கண்ணினும்....................... போல
(இ-ள்)
கண்ணினுங் கொள்ளாது- கண்ணாலும் நோக்காமல்; உண்ணவும் பெறாது நிழல் தலைமணந்த -
உண்ணவும் விருப்பம் பெறாமல் குளிர்ச்சியைத் தன்னிடத்தே கொண்ட; புனல் கிடவாது
- நீரிலும் படுத்திராமல்; விண் உடைத்து
|