பக்கம் எண் :

470கல்லாடம்[செய்யுள்63]



உண்ணும்- விண்ணுலகத்தை அழித்துக் கொள்ளை கொண்டுண்ணும்; வினைச்சூர்- தீவினையையுடைய சூரபன்மனாலே; கவர்ந்த - சிறை கொள்ளப்பட்ட; வானவர் மங்கையர் மயக்கம் போல-தேவமகளிர் தடுமாற்றம் போல என்க.

     (வி-ம்.) தாமரைப்பூவைக் கண்ணினுங் கொள்ளாது என்க. நிழல் - ஈண்டுக் குளிர்ச்சி. வினை-தீவினை. சூர் - சூரபன்மன்.

10 - 14: பிணர்.................................... துய்த்து

     (இ-ள்) பிணர்கரு மருப்பின் - பொருக்கையுடைய கரிய கொம்புகாளலே; பிதிர்பட உழக்கி - சேறாகும்படி நீரைக் கலக்கி; வெண்கார் கழனி - வெள்ளிய கார்நெற் பயிருள்ள வயல்களினிடத்தேயுள்ள; குருகு எழ புகுந்து - பறவைகள் சிறையடித் தெழும்படி பாய்ந்து சென்று; கடுக்கைச் சிறுகாய் அமைத்த வால்கருப்பை-கொன்றையினது சிறிய காய்போன்ற வாலையுடைய காரெலியினது; இணை எயிறு என்ன - தம்மில் ஒத்த பற்கள் போன்று; இடை இடை முள்பயில் - நடுவே நடுவே முட்கள் பொருந்திய; குறும்புதல் முண்டகம்- குறிய புதலாகிய நீர்முள்ளிச் செடியை; கரும்புஎன துய்த்து-கரும்பைத் தின்பது போல விரும்பித் தின்று என்க.

     (வி-ம்.) பினர்-பொருக்கு. வெண்கார் - வெண்மை நிறமுடைய நென்மணியை யுடைய கார்காலத்துப் பயிர். குருகு-பறவைப் பொது. கடுக்கை-கொன்றை. கருப்பை-காரெலி; ஒருவகை எலி. இதன் வாலுக்குக் கொன்றையின் சிறுகாய் உவமை. முள்ளிச் செடியின் முள்ளுக்குக் காரெலியின் பற்கள் உவமை.

15 - 19: செங்கன்............................. அமுதினை

     (இ-ள்) செங்கண் பகடு தங்கும் வயல் ஊரர்க்கு-சிவந்த கண்களையுடைய எருமைகள் மிகக்குறைகின்ற கழனிகளையுடைய மருத நிலத்தூரினையுடைய தலைவராகிய நுமக்கு; அருமறை விதியும் - உணர்தற்கரிய மெய்ந்நூல் விதியும்; உலகியல் வழக்கும் - உலத்தார் ஒழுகும் ஒழுக்கமும ; கருத்து உறைபொருளும்-கருத்தின்கண் உறைகின்ற நுண்பொருளும்; விதிப்பட நினைந்து - முறைப்பட ஆராய்ந்துணர்ந்து; வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி - வடமொழிப் புணர்ச்சியாக வருவனவற்றையும் அதற்குரிய முறைப்படி சேர்த்து; ஐந்திணை வழுவாது -குறிஞ்சி முதலிய ஐவகை ஒழுக்க முறைமையும் வழுவாமல்; அக்ப்பொருளி அமுதினை - அகப்பொருள் இலக்கணம் என்னும் அமிழ்தை யொத்த சுவையையுடை நூலை என்க.

     (வி-ம்.) பகடு - எருமை, தலைவற்கு - முன்னிலைப் புறமொழி. அருமறை- உணர்தற்கரிய நான்மறை. உலகியல் வழக்கு - சான்றோர்