பக்கம் எண் :

மூலமும் உரையும்471



ஒழுகும் ஒழுக்கம். வடசொல் மயக்கம்-செந்தமிழின்கண் வந்து கலக்கும் வடமொழிக் கலப்பு, அவற்றைப் புணர்த்துதலாவது,

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
"எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" (தொல். சூ. 884)

எனவரும் இலக்கண முறைப்படி தமிழ் மொழியின்கண் அமைத்தல. ஐந்தினை- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் இன்ப வொழுக்கங்கள். அமுது: உவமவாகு பெயர். அகப்பொருள் அமுது என்றது இறையனாரகப் பொருளை என்க.

20 - 24: குறுமுனி................................. கூடல்.

     (இ-ள்) குறுமுனி தேரவும் - அகத்திய முனிவன் நன்கு தெளியவும்; முதல்பெறு புலவர்கள் ஏழ்எழு பெயரும் கோது அறப் பருகவும் - தலைமை பெற்ற சங்கப் புலவர்களாகிய நாற்பத்தொன்பதின்மரும் ஐயந்திரிபின்றி உட்கொள்ளவும்; புலன் நெறிவழக்கில் புணர் உலகவர்க்கும் - ஐந்து புலன்கள் வழியாக இன்பம் துய்க்கின்ற இல்வாழ்வார்க்கும்; முன்தவம் பெயருக்கும் முதல் தாபதர்க்கும் - அவ் வைம்புலன்களையும் அடக்கி இளமை தொடங்கித் தவத்தைப் பெருக்காநின்ற முதன்மையுடைய துறவிகளுககும்; நின்று அறிந்து உணர்த்தவும்-தாம்தாம் நிலைபெற்றுணர்ந்து மாணவர்க்கு அறிவுறுத்தவும்; தமிழ்ப் பெயர் நிறுத்தவும்-தமிழ் என்னும் மொழியின் புகழை உலகில் நிலைநிறுத்தவும்; எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன் - 'அன்பினைந்திணை' என அடியெடுத்து விரித்தருளிய தேவதேவனுரடைய; மெய்த தவக் கூடல்-மெய்யாய தவப்பயனைத் தருகின்ற மதுரை நகரிடத்தே என்க.

     (வி-ம்.) குறுமுனி - அகத்தியன், புலவர் ஏழ்எழு பெயரும் என்றது கடைச் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மரையும். கோது - குற்றம். அவை ஐயமும் திரிபும் என்க. அமுதம் என்பதற்கேற்பப் பருகவும் என்றார். புலன் நெறி என்றது இல்லறத்தை. தாபதர் -துறவிகள். மாணவர்க்கு உணர்த்தவும் என்க. பெயர் - புகழ்.

24 - 30 விளைபொருள்.......................................இடனே

     (இ-ள்) விளைபொருள் மங்கையர் - பிறர் ஈட்டிய பொருளை விரும்புகின்ற பரத்தை மகளிர்; முகத்தினும் கண்ணினும்-தம் முகத்தாலும் கண்களாலும்; முண்டக முலையினும்-தாமரை யரும்பையொத்த முலைகளானும்; சொல்லினும் தொடக்கும் புல்லம் போல - சொற்களாலும் வயப்படுத்தும் பொய்யாய தழுவுதல் போல; எம்மிடத்து இலது - எம்பால் இல்லை; அங்ஙனம் இல்லையாகவும்; இவ்விடன் தம் உளம்