பக்கம் எண் :

472கல்லாடம்[செய்யுள்63]



தவறி போந்தது என்னை - எம்மில்லமாகிய இந்த இடத்தில் தங்கள் உள்ளம் தடுமாறி வந்ததற்குக் காரணம் யாதோ? அறிகின்றிலேம் என்க.

     (வி-ம்.) விளைபொருள் - பிறர் ஈட்டும் பொருள். பிறர் ஈட்டும் பொருளை விரும்பும் பரத்தையர் என்பாள் விளைபொருள் மங்கையர் என்றாள். எனவே அவர் செய்யும் செயல்களெல்லாம் நீயிர் ஈட்டும் பொருட் பொருட்டன்றி நும்பால் அன்பால் செய்வாரலர் என்றாளும் ஆயிற்று. முகம் முதலிய புறத்துறப்புக்களாலேயே அவர் உன்னை வயப்படுத்துகின்றனரேயன்றி அகத்துறுப்பாகிய அன்பாலன்று என்பாள், முகத்தினும் கண்ணினும் முலையினும் சொல்லினும் தொடக்கும் புல்லம் என்றாள். புல்லம்-புல்லல். ஆதலால் நீ இடந்தெரியாமல் ஈண்டு வந்தனைபோலும்; இது பரத்தை இல்லம் அன்று என்பாள் 'இவ்விடன் தம்முளம் தவறிப்போந்தது என்னை' என்றாள் தவறால்-தடுமாறுதல். போந்தது - வந்தது.

     இதனை, ஊரர்’கு விதியும் வழ’கும் பொருளும் நினைந்து புணர்த்தி, அகப்பொருளமுதைத் தேறவும் பருகவும் உலகவர்’குந் தாபதர்’கும் உணர்த்தவும் நிறுத்தவும் பரப்பிய நாயகன் கூடலில், பொருண் மங்கையர் புல்லம் போல எம்மிடத்திலது, அற்றாகவும் இவ்விடத்தே யுள்ளந்தவறித் தாம்போந்த தென்னையென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.