|
எல்லாம்; வளர் பெரும்
பகலே- வளர்தற்கிடனான பெரிய நண்பகலிலே; எரிவிரிந்து அன்ன இதழ்பல் தாமரை- தீக்கொழுந்து
விரிந்தாற் போன்ற இதழையுடைய பலவாகிய தாமரை மலர்கள்; அருள் முகம் திருவொடு மலர்முகம்
குவிய-அருள் நிறைந்த முகத்தையுடைய திருமகளுடனே தமது மலர்ந்த முகங்கள் கூம்பாநிற்பவும்;
மரகதப் பாசடை இடை இடை நாப்பண்-மரகதமணி போன்ற பச்சிலைகளின் நடுவே நடுவே; நீலமும்
மணியும் நிரைகிடந்து என்ன-நிலமணியும் மாணிக்க மணியும் அணி அணியாகக் கிடந்தாற்போல;
வண்டொடு குமுதம் மலர்ந்து இதழக்ளை விரியாநிற்பவும்; குருகும் சேவலும் பார்ப்புடன்
வெருவி-பெடையன்னங்களும் அவற்றின் சேவல்களும் தத்தம் குஞ்சுகளுடனே பொழுது போயிற்றென்று
அஞ்சி; பாசடைக் குடம்பை ஊடு கண்படுப்ப-பசிய இலைகளாலாகிய கூடுகளிடத்தே சென்று துயிலா
நிற்பவும் என்க,
(வி-ம்.)
மரகதம் - ஒருவகை மணி, இடை இடை நாப்பன்: ஒருபொருட் பன்மொழி. நீலம்-நீலமணி.
மணி-மாணிக்கமணி. அணி-வரிசை வண்டுக்கு நீலமணியும் குமுதத்திற்கு மாணிக்க மணியும்
உவமை. குமுதம்-செவ்வல்லி. குருகு- அஞ்சி குடம்பை-கூடு
30-34
: துணையுடன் ...................... பொலிந்தே
(இ-ள்)
சகோரம் துணையுடன் களியுடன் பெயர்ந்து-சகோரப் பறவைகள் தத்தம் காதற்றுணையோடும்
மகிழ்ச்சியோடும் பறந்து; விடும் அமுது அருந்த விண்ணத்து அணக்க-திங்கள் மண்டிலம்
பொழிகின்ற நிலாவமிழ்தத்தை உண்ணுதற்கு வானத்தே அண்ணாந்திடவும்; சுரிவளை சாத்து
நிறைமதி தவழும் எறிதிரை பழனக்கூடல்-முகம் சுரிந்த சங்குக் கூட்டங்கள் ஈன்ற முத்துக்களினது
நிறைந்த நிலாவொளி தவழுகின்ற அலை எறிகின்ற கழனிகள் சுழ்ந்த மதுரையினிடத்தே;
திருவொடும் பொலிந்து இன்று செறிக-நீவீர் இன்பத்தாற் பொலிவுற்று இன்று சென்று சேர்வீராக
என்க.
(வி-ம்.)
சகோரம்-நிலவொளியை யுண்டுயிர் வாழும் ஒரு வகைப் பறவை. சுரிவளைச் சாத்து நிறைமதி
தவழும் என்பதற்கு சுரிந்த முகங்களையுடைய வலம்புரிச் சங்குக் கூட்டங்கள் முழுத்திங்கள்
கூட்டம்போல தவழுகின்ற எனினுமாம். திரு-ஈண்டு இன்பம் என்னும் பொருள் குறித்து நின்றது;
ஆகுபெயர்.
இதனை,
ஒருவரினொருவ ருள்ளத்டக்கி, ஊரடக்கி, வெள்ளமுங்கள்ளமுங் கடந்து, தனியத்துயராற்றிக்
கொடுத்து, யானே நும்பாற் கிடைப்பன், இணையிலி நாயகன் கூடலில், திருவுடன் பொலிந்து
நீவிர் செறிக என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும்பயனும் அவை.
|