அன்னவள் கூறுவா
ளரசர்க் கத்தையர்க்
கென் னுடை வணக்கமுன் னியம்பி யானுடைப்
பொன்னிறப் பூவையுங் கிளியும் போற்றுகென்
நுன்னுமென் றெங்கையர்க் குணர்த்து வாயென்றாள்
(இராம
அயோத். தைலமாட், 40) |
எனக் கூறி விடுக்கும்
செய்தியினையும் நினைக. கிடைத்தல் கிட்டுதல். அஃதாவது சென்று சேர்தல். கச - உக
: தழைத் ......... அமைத்த
(இ-ள்)
தழைத்து எழு தாளியும் கொன்றையும் தழைத்தலின்-தளிர்த்தெழுந்த தாளிமலரும் கொன்றை
மலரும் மிக்கிருத்தலால்; முல்லையும்-முல்லை நிலமும்: பாந்தளும் தரக்கும் பயிறலில்
குறிஞ்சியும்-பாம்புகளும் புலிகளும் வழங்குதலாலே குறிஞ்சி நிலமும்; முடைத்தலை எரி பொடி
உடைமையில் பாலையும்-முடை நாற்றம் வீசும் இடமும் நெரும்பும் சாம்பரும் உண்டாயிருத்தலால்
பாலை நிலமும்; ஆமையும் சலமும் மேவலின் மருதமும்-ஆமையும் நீரும் பொருந்தியிருத்தலால்
மருத நிலமும்; கடுவும் சங்கமும் ஒளிர்தலின் நெய்தலும்-நஞ்சும் சங்குகளும் விளங்குதலால்
நெய்தல் நிலமும்; ஆக-தோன்றும்படி; தனது பேரருள் மேனியில்- தன்னுடைய பேருட்பிழம்பாகிய
திருமேனியின்கண்; திணை ஐந்து அமைத்த-ஐந்து திணைகளையும் ஏற்றுள்ள என்க.
(வி-ம்.)
தாளி கொன்றை என்பன ஆகுபெயர். தழைத்தலின் என்றது ஈண்டு மிகுதி குறித்து நின்றது.
பாந்தள்-பாம்பு. தரக்கு-புலி. முடை-முடைநாற்றம். தலை- ஈண்டு இடம். எரி-நெருப்பு.
பொடி-சாம்பர். சலம்-நீர்: வடமொழி, கடு-நஞ்சு. இறைவனுடைய மேனி அருட்பிழம்பேயாதலின்
பேரருள் மேனி என்றார். இறைவனுடைய திருமேனி மக்களுடல்போலப் பூதங்களால் ஆயதன்று
அருளால் இயன்றது என்னுமிதனை,
உருமேனி தரித்துக்
கொண்ட தென்றலும் உருவி றந்த
அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே (சித்தியார்-55) |
எனவரும் சித்தியாரானும்
உணர்க. ஐந்து திணையாவன-முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன,
21-29:
இணையில் ..........................படுப்ப
(இ-ள்)
இணையிலி நாயகன் வரும் தொழில் அனைத்தும்-ஒப்பில்லாதவனாகிய இறைவன் நிகழ்த்திவரும்
தொழில்கள்
|