|
கண்களால் பேசிக்கொண்டதுபோல;
இவ்வூர்- இந்த ஊர் மக்கள்; ஒருவரின் ஒருவர் சொல்ல - ஒருவரோடொருவர் சொல்லி;
உள்ளத்து அடக்கி - தத்தம் நெஞ்சிலேயே வெளிவிடாதடக்கி; தோன்றா நகையுடன் துண்டமும்
சுட்டி - வெளிப்படாத நகைப்போடே மூக்கின்மேல் விரல் இட்டுக் குறித்து; தூற்றும் அம்பல்
அடக்கி- புறங்கூறுகின்ற அலர்மொழியைக் கூறாது அடக்கி என்க.
(வி-ம்.)
கொடுங்கோல் மன்னனுக்கு அழிவு வந்துற்றபொழுது அவனால் இன்னலுற்ற குடிமக்கள் அஞ்சி
ஒருவரோ டொருவர் கண்களால் பேசிக்கொள்வது தலைவியின் ஒழுக்கம் பற்றி ஊர் மாக்கள்
தம்முள் ஒருவரோடொருவர் பேசும் அம்பலுக்குவமை. அம்பல்-ஒலி வெளிப்படாது தம்முள் மெல்ல
முகிழ் முகிழ்த்துப் பேசுதல். இங்ஙனம் பேசுவோர் மூக்கில் விரலைவைத்துப் பேசுதல்
வழக்கம். இதனை,
"சிலரும் பலருங்
கடைக்க ணோக்கி
மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டி ரம்ப றூற்ற" (நற்றினை..
149) |
எனவரும் செய்யுளானும்
உணர்க.
10
- 14: கடல்...................... நும்மை
(இ-ள்)
கடல் கிடந்து அன்ன நிரைநிரை ஆயவெள்ளமும் - கடல் கிடந்தாற்போல அணி அணியாக நின்ற
தோழிமார் கூட்டத்தையும்; மற்றையர் கள்ளமும் கடந்து- பிறசுற்றத்தாருடைய வஞ்சத்தையும்
நீங்கி; தாயவர் மயங்கும் தனித்துயர் நிறுத்தி-நம் தாய்மார் நின் பிரிவினால்
மயங்காநின்ற ஒப்பற்ற துன்பத்தையும் ஆற்றி; பறவை மக்களை பரியுநர் கொடுத்து-யாம்
அன்புடன் வளர்த்த கிளி முதலிய பறவையாகிய குஞ்சுகளை நம்போல் அன்புறுவோரிடத்துப்
பேணும்படி ஒம்படை செய்து; வல் நும்மை யானே கிடைப்பல்-விரைவில் நுங்களிடத்தே யானே
வந்து சேருவேனாக என்க.
(வி-ம்.)
கடல்போல மிக்க ஆயவெள்ளம் என்றவாறு. ஆய வெள்ளம்- தோழியமார் கூட்டம். மற்றையர்
என்றது ஏனைச் சுற்றத்தாரை. கள்ள்ம்- வஞ்சகம். தாயவர் என்புழி அவர் பகுதிப்பொருட்டு.
நற்றாயும் செவிலித் தாயாரும் எனத் தாய்மார் பலராகலின் பன்மை கூறினள். தனித்துயர்
- ஒப்பற்ற துன்பம். மகப் பிரிதலால் வரும் துன்பமாகலின் அங்ஙனம் கூறினாள். மக்கள்
போல வளர்த்தலின் பறவைகளையே மக்கள் என்றாள் எனினுமாம். குஞ்செனின் வழுவமைதியாகக்
கொள்க. பரியுநர்- அன்புறுவோர். இனி பரிக்குநர் என்பது பரியுநர் என்று மருவி நின்றது
எனினுமாம். பரிக்குநர்- பாதுகாப்பவர். இது அம்மகளிரின் பேரன்பினைப் புலப்படுத்துகின்றது.
இதனோடு தன் கணவனுடன் நாடிறந்து காடு நோக்கிச் செல்லும் சீதை சுமந்திரனை நோக்கி.
|