பக்கம் எண் :

484கல்லாடம்[செய்யுள்65]



எனின் யான் என்றும் நின்பதம் பணிகுவல் என விரித்தோதுக. கொன்மைத்து- அனாதித்தன்மை, கொடுங்குணம் - பிறரை வருத்துதல். எற்கு - எனக்கு, அன்று, ஏ: அசை

     இதனை, கடன் மடமகளே! புணர்ந்து, உலகறியக் கலுழ்ந்து, கலங்கி, அலறி, நொந்து, குழவியும் பிள்ளையும் மகவுமீன்ற வருத்தமுடைமையாதலால் நிறையினளாக என்மயிலையு நின் மகளாகக் கொண்டு, கூடற்பெருமானது தொன்மைத்தென்ன, குரலமைந்தொடுங்கி, தீக்குண மொழிந்து உள்ளங் குளிரும் பெருநன்றி யுதவுதியெனின், நின்பதம் பணிகுவலென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.