|
அகத்திய முனி, தரளம்
- முத்து, சந்து - சந்தனம், முடங்குளை - அன்மொழித் தொகை; சிங்கம், கரிக்கோடு
- யானைக்கொம்பு, அருவியாகிய கைகளில் ஏந்திக்கொண்டு என்க. பொருளை - தாமிரபருணி,
கடலாகிய கணவனை இன்னும் சென்றடையாமையால் பொருனையைக் கன்னி என்றால், கன்னிக்கு
அணிகலம் பூட்டுதல் அறம், அணியணி - அழகிய அணிகலன். செம்பு - தாமிரம், பொதியமலையில்
தாமிரம் என்னும் உலோகம் கலந்திருத்தலின் செம்புடல் பொதிந்த பொதியம் எனப்பட்டது.
அம்மலையினின்றும் வருதலால் பொருனையைத் தாமிரபருணி என வழங்குகின்றனர் என்பாருமுளர்.
17-20:
உவட்டாது ............................ பெருமான்
(இ-ள்)
உவட்டாது அமையா உணர்வு எனும் பசி எடுத்து - உண்டு தெவிட்டாத வழி அமையாத அறிவு என்கின்ற
பசி தோன்றி; உள்ளமும் செவியும் உருகி நின்று உண்ணும் பெருந்தமிழ் அமுதும் - நெஞ்சமும்
செவியும் இன்பத்தால் உருகி நிலைத்துப் பருகுதற்குக் காரணமான பெரிய தமிழாகிய அமிழ்தத்தையும்;
பிரியாது கொடுத்த - பிரிவற்றிருக்குமாறு வழங்கியருளிய; தோடு அணி கடுக்கைக் கூடல்
எம்பெருமான் - இதழ் நெருங்கிய கொன்றை மலரை அணிந்த மதுரையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்
என்க.
(வி-ம்.)
அமையா உணர்வு என்னும் பசி தோன்றி உண்ணும் தமிழ் அமுதம் என்க. குறுமுனிக்குப் பொதிய
மலையையும் தமிழமுதும் கொடுத்த பெருமாள் என்க. உள்ளம் உருகிச் செவியாகிய வாயால்
உண்ணும் அமிழ்து எனினுமாம். தோட்டையும் அணி கடுக்கையும் அணிந்த பெருமான் எனினுமாம்.
தோடு - இதழ்; குழையுமாம். கடுக்கை - கொன்றை மலர்.
21-26:
எவ்வுயிர்......................................அன்றே
(இ-ள்)
எவ்வுயிர் இருந்தும், எவ்வகைப்பட்ட உயிர்க்களிடத்தும் கலந்திருந்தும்; அவ்வுயிரதற்கு
தோன்றாது அடங்கிய-அவ்வுயிர்க்குத் தான் வெளிப்படாது அடங்கிய; தொன்மைத்து என்ன
- அனாதித் தன்மைபோல்; ஆர்த்து எழு - ஆரவாரித்து மேமெழுகின்ற; பெருங்குரல் அமைந்து
நின்று - பேரோசை அடங்கி நின்று; ஒடுங்கி - தணிந்து; நின்பெருதீக்குணனும் ஒழிந்து
- உனது மிக்க கொடுங்குணமும் நீங்கி; உளங்குளிரும் இப்பெரு நன்றி - என் நெஞ்சம்
குளிரத்தக்க இப்பேருதவியை; இன்று எனக்கு உதவுதி எனின் - இற்றைநாள் எனக்குச் செவ்வாய்
எனின்; நின்பதம் பணிகுவல்யான் எக்காலமும் உன் அடிகளை வணங்குவேன்காண் என்க.
(வி-ம்.)
இறைவன் எல்லா வுயிர்களிடத்தும் இருந்தேயும் தோன்றாது அடங்கியிருத்தல் போல நீயும்
நின் ஆரவாரமடங்கி இருத்தல் வேண்டும் என வேண்டிக் கொண்டவாறு. இன்று உதவுதி
|