பக்கம் எண் :

482கல்லாடம்[செய்யுள்65]



தனால் ; மனம்எழு வருத்தம் உடைய ஆகலின்-மனத்தின்கண் எழாநின்ற துன்பத்தை உடையை ஆதலால் என்க.

     (வி-ம்.) சயிலக் கணவனைப் புணர்ந்து திருமுதலிய மக்களைக் கண்கலுழ்ந்து கலங்கி அலறி நொந்து ஈன்றதனால் நீ மனவருத்தம் உடையையாக இருக்கின்றனை ஆகையால் என்க. இருநிலம் என்புழி, இருமை - பெருமை. வலிகெழு சயிலம் நோன்மைப் பொன்முடி என வலிமையைச் சயிலத்திற்கும் நோன்மையை முடிக்கும் ஏற்றுக. சயிலம் - மலை. அஃதாவது மந்தரமலை. திரு - திருமகள், குழவி, பிள்ளை மகவு என்பன ஒருவகையணி. உலகு : ஆகுபெயர். கண்ணொடு என்புழி மூன்றனுருபு ஏழனுருபின்கண் மயங்கிற்று. கண் முத்தம் என்பனவற்றைச் சிலேடை வகையால் பொருள் காண்க.

8 - 9 : பெருமயல் ........................ கொண்டு

     (இ-ள்) பெருமயல் எய்தா நிறையினள் ஆக - மிக்க மயக்கத்தைப் பொருந்தாத மாட்சிமையுடையளர யிருக்கும்படி ; என் ஒரு மயிலையும் நின்உளங் கொண்டு - என் தோழயாகிய மயில் போன்ற இப்பெண்ணையும் நின் மகளாகக் கருதி என்க.

     (வி-ம்.) கடலே நீ வருந்தி மகப்பல பெற்றுள்ளாய் ஆதலின் மகவருமை நன்குணர்வை, எம்பெருமாட்டியையும் நின்மகளாகக் கருதி(க் கொள்க) என்றவாறு. நிறையினள் - துன்புறாது நெஞ்சை நிறுத்தும் பண்புடையளாக எனினுமாம், மயில் : உவமவாகு பெயர்.

10 - 16: தோன்றி...............................பொதியமும்

     (இ-ள்) தோன்றி நின்று அழியா துகள்அரு பெருந்தவம் - பிறந்து இருந்து இறவாமைக்குக் காரணமான குற்றமற்ற பெரிய தவத்தையே ; நிதி எனக் கட்டிய குறுமுனிக்கு - தான் பெருதற்குரிய செல்வமாகக் கருதி வளர்த்துள்ள அகத்திய முனிவனுக்கு ; அருளுடன் தாளமும் சந்தும் எரிகெழு மணியும் - பேரன்புடன் முத்துக்களையும் சந்தனத்தையும் ஒளிபொருந்திய மணிகளையும் ; முடங்குளை அகழ்ந்த கொடுங்கரிக் கோடும் - வளைந்த பிடரிமயிரையுடைய சிங்கத்தினால் அகழப்பட்ட வளைந்த யானைக் கொம்புகளையும் ; அகிலும் கனகமும் - அகிலையும் பொன்னையும் ; அருவிக்கொண்டு - தனது அருவிகளாகிய கையில் ஏந்திக்கொண்டு ; இறங்கி பொருனை அம் கன்னிக்கு - கீழிறங்கி வந்து பொருனையாறு என்னும் அழகிய பெண்ணுக்கு ; அணிஅணி பூட்டும் - அழகிய அணிகலன்களாக பூட்டா நின்ற ; செம்பு உடல் பொதிந்த தெய்வப் பொதியமும் - செம்பென்னும் உலோகம் விரவிய உடம்பால் மூடப்பெற்ற தெய்வத் தன்மையுள்ள பொதியமலையையும் என்க,

     (வி-ம்.) அழியாமைக்குக் காரணமான தவம், துகளறு தவம் எனத் தனித்தனி கூட்டுக, நிதி - ஈட்டிவைக்கும் செல்வம் ; குறுமுனி -