பக்கம் எண் :

மூலமும் உரையும்487



  வறிவகன் றுயர்ந்த கழன்மணி முடியு
முடைமையன் பொற்கழல் பேணி
யடையலர் போல வருண்மனந் திரிந்தே.

(உரை)
கைகோள் : களவு தலைவன் கூற்று

துறை : பிரிவுணர்த்தல்

     (இ-ம்.) இதற்கு, “ முன்னிலை யாக்கல் ” (தொல், களவி. சு0) எனவரும் நூற்பாவின்கண் ‘ தெளிவு அகப்படுத்தல் ’ எனவரும் விதி கொள்க.

11 : எழுகதிர்...................திருந்திழை

     (இ-ள்) எழுகதிர் விரிக்கும் - குணகடலில் எழாநின்ற இளஞாயிறுபோல ஒளியைப் பரப்புகின்ற ; மணிகெழு திருந்து இழை - மணிகள் பொருந்திய திருத்தஞ் செய்யப்பட்ட அணிகலன்களையுடைய நங்கையே என்க.

1-6 : நிலை............................அடைத்தும்

     (இ-ள்) நிலையுடை பெருந்திரு நேர்படு காலை - நிலைநிற்றலையுடைய பெருஞ் செல்வமானது தானே வந்தெய்திய காலத்தே ; காலால் தடுத்து - அதனைக் காலால் தள்ளி ; எதிர் கனன்று கறுத்தும் - அதற்கெதிராக நெஞ்சழன்று வெகுண்டும் ; நனிநிறை செல்வ நாடும் . ஒழியாது நிரம்பிய வளப்பத்தைத் தருகின்ற நாடும் ; நன்பொருளும் எதிர்பெறின் - நல்ல பொருள்களும் தாமே வந்து எதிர்ப்பட்ட விடத்தே ; கண்சிவந்து எடுத்தும் அவை களைந்தும் - கண் சிவக்கும்படி சினந்தும் அவையிற்றை எடுத்தெறிந்தும் ; தாமரை நிதியும் வால்வளை தளமும்பதுமநிதியும் வெள்ளிய சங்கநிதியும் ; இல்லம் புகுதலில் - தாமே வந்து வீட்டில் புகுமிடத்தே ; இருங்கதவு அடைத்தும் - அவை புகுதாதபடி பெரிய கதவுகளை அடைத்துத் தடுத்து்ம் என்க,

     (வி-ம்.) நிலையாமையே இயல்பாயுள்ள செல்வத்தினும் மேலாய செல்வம் என்பான் நிலையுடைப் பெருந்திரு என்றான். அதற்கு நேர்படுதல் அரிது என்பான் - நேர்படு காலை என்றான், நனிநிறைந்த செல்வத்தையுடைய நாடு என்க. அஃதாவது நாடாவளத்தையுடைய நாடு, நன்பொருள் என்றது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பன. தாமரை நிதி - பதமநிதி. வளைத்தனம் - சங்கநிதி