பக்கம் எண் :

488கல்லாடம்[செய்யுள்66]



7-10 : அரி....................................உளரேல்

     (இ-ள்) அரி அயன் அமரர் - திருமாலும் பிரமனும் தேவர்களும், மலைவடம் பூட்டி - மந்தரமலையாகிய மத்தின்கண் வாசுகி என்னும் வடத்தைப் பூட்டி ; பெருங்கடல் வயிறு கிடங்கு எழ - பெரிய கடலினது வயிறானது பள்ளமாகும்படி ; கடைந்த அமுதம் உள்கையில் உதவுழி ஊற்றியும் - கடைந்ததனாற்றிரணட் அமிழ்தத்தை உள்ளங்கையில் கிடைக்கும் பொழுது அதனைத் தரையிற் கவிழ்த்தும் ; மெய்உலகு இரண்டினுள் - மெய்மையுள்ள விண்ணுமாகிய இரண்டுலகத்தினும் ; செய்குநர் உளரேல் - செய்தார் உண்டாயிருந்தால் என்க.

     (வி-ம்.) திருமால் முதலிய தேவர்கள் திருப்பாற் கடலில்கண் மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக் கடை கயிறாகக்கொண்டு அமுதம் கடைந்தனர் என்பத புராண வரலாறு. வயிறு . ஈண்டு உன்னிடம், கிடங்கு - பள்ளம், உள்கை - உள்ளங்கை, பெருந்திரு முதலியன தாமே வந்தெய்தும் பொழுது அவற்றை வேண்டாமென விடுப்போர் மண்ணிலும் விண்ணிலும் இல்லை என்றவாறு,

13-17: முழுதுற............................அகன்றிடலும்

     (இ-ள்) முழுதுஉற நிறைந்த பொருள் - உள்ளும் புறமுமாக எங்கும் நிறைந்துள்ள சிவமென்னும் பொருளை ; மனம் நிறுத்திமுன் வேடம் துறவா - தன் நெஞ்சின்கண்ணே நிலைபெற வைத்தும் தாம் முன்பு தழுவிய சமண சமயத்திற்குரிய வேடத்தைக் கைவிடாத ; விதிஉடை சாக்கியன் - முறைமையையுடைய சாக்கிய நாயனார் ; அருள்கரை காணா - திருவருள் என்னும் கரையைக் கண்டு ; அன்பு என்னும் பெருங்கடல் - அன்பாகிய பெரிய கடலானது ; பலநாள் பெருகி - நெடுங்காலமாகப் பெருக்கெடுத்து ; ஒருநாள் உடைபட்டுக் கரைநிலை பெறாமல் கைகடந்து செயலற்றுப் போதலும் என்க.

     (வி-ம்.) முழுதுற நிறைந்த பொருள் என்றது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த இறைவனை முன்வேடம் - சாக்கிய நாயனார் முன்னர்த் தழுவியிருந்த சமணத் துறவிவேடம், அஃதாவது தோமரு கடிஞையும் சுவன்மேல் அறுவையும் கைப்பீலியும் பாயுடையும் உறியும் பிறவும் உடைய வேடம் என்க. காணா . கண்டு. கையகன்றிடல் - எல்லை கடத்தல்.

18-25: எடுத்தடை......................................கடலும்

     (இ-ள்) எடுத்து அடைகல் மலர் அவை தொடுத்துச் சாத்திய - பொறுக்கிச் சேர்த்து வைத்த கல்லாகிய மலர்களைத் தொடர்ச்சியாக எறிந்து வழிபாடு செய்த ; இணையாப் பேரொளி