பக்கம் எண் :

மூலமும் உரையும்489



கூடல்மாமணி - ஒப்பில்லாத பேரொளியாகிய மதுரையிலுள்ள கடவுள் மணி ; குலம்மலைக் கன்னி என்று அருள் குடியிருக்கும் - மேன்மையாகிய மலைமகள் என்று பெயர் கூறப்பட்டுத் திருவருள் பரியாதிருக்கின்ற ; விதிநிறை தவறா ஒருபங்கு உடைமையும் - வேதத்தால் விதிக்கப்பட்ட பெருமை தவறாத ஒரு பாகமுடைய தன்மையும் பறவை செல்லாது நெடுமுகனாகிய அன்னப்பறவை செல்லாமல் நெடிய வான முகட்டைக் கடந்து அப்பாற் சென்ற திருமுடியினின்னும் வீழ்கின்ற அழகிய கங்கையாற்றின் துறையும் ; நெடும்பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் அருங்கரை இறந்த ஆகமக் கடலும் - பயில்வோர் நெடுங்காலமாகிய பல்லூழி காலம் நினைப்புடனே நீந்திச் சென்றாலும் அருமையாகிய கரைகாணக் கூடாத சிவாகமம் என்னும் கடலும் என்க,

     (வி-ம்.) அடைகல் - சேர்த்து வைத்த கல், சாக்கிய நாயனரால் கல்மலரால் வழிபாடு செய்யப்பட்ட கூடல் மாமணி என்க, மணி - மாணிக்கம். கடவுளருள் வைத்து மாணிக்கம் போன்ற கடவுள் என்பது கருத்து. மலைக்கன்னி - பார்ப்பதி. நின்ற - பெருமை. பறவை - இறைவனுடைய முடியைக் காணச்சென்ற நான்முகனாகிய அன்னப் பறவை எனக். சேகரம் - முடி. திருநதி என்றது கங்கைப் பேரியாற்றினை. ஆகமம் - சிவாகமம்.

26-31: இளங்கோ......................................திரிந்தே

     (இ-ள்) இளம் கோவினர்கள் இரண்டு அறிபெயரும் - இளங் கடவுளராகிய படைத்தல் அழித்தல் என்னும் இரு தொழிலையும் அறிந்த நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் ; அன்னமும் பன்றியும் ஒல்லையில் எடுத்து - அன்னமாகவும் பன்றியாகவும் விரைந்து உருவெடுத்துக்கொண்டு ; பறந்தும் அகழ்ந்தும் படி இது என்னா - விண்ணில் பறந்தும் மண்ணைத் தோண்டியும் அளவு இஃதாம் என்று ; அறிவு அகன்று உயர்ந்த கழல்மணி முடியும் - கூறவியலாதபடி அவர்களுடைய அறிவினையும் கடந்து அப்பாற்பட்டுள்ள வெற்றிக் கழலணிந்த திருவடிகளையும் அழகிய முடியினையும் ; உடைமையன் பொற்கழல் பேணி அருள் திரிந்து அடையலர் மனம்போல - உடையவனது பொன்னடியை வழிபட்டு அவன் அருளை அடையாமல் மாறுபட்டு அவ்வடியை அடையாத மடவோர் நெஞ்சு போல என்க.

     (வி-ம்.) முழு முதற்கடவுளின் ஆனைவழி நின்று தொழில் செய்தலின் நான்முகனும் திருமாலும் இளங்கோவினர் எனப்பட்டனர். இரண்டு - படைப்பும் அழிப்புமாகிய இரண்டு தொழில்கள். அன்னமும் பன்றியுமாக உருவெடுத்து என்க. படி - ஒப்புமாம். கழலும் மணிமுடியும் என்க.