பக்கம் எண் :

490கல்லாடம்[செய்யுள்66]



12: நின்..........................ஆகுவன்

     (இ-ள்) நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் - நின்னைப் பிரிதலுக்கு நினையா நின்ற நெஞ்சமுடையேன் ஆக என்க.

     (வி-ம்.) கழல்பேணி அடையலர் மனம்போல மனன் உளனாகுவன் என இயைத்துக்கொள்க.

     இதனை, திருந்திழையே ! பெருந்திருவைக் கறுத்தும், நாடும் பொருளும் பெறின், கண்சிவந்து களைந்தும், நிதியுந்தனமும் புகின் கதவடைத்தும், அமுத முதவுழி யூற்றியும், செய்தாருளரேல், கூடன் மாமணியாகிய வுடைமையன் கழல்பேணி, அடையலரது, அருள் திரிந்த மனம்போல நிற்பிரிவுள்ளு மனனுளனாவேனெ வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.