|
புல்லிய புல்லா துயங்குவள்
கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென சீறடி
புல்லிய விரவினும் என்னும் விதிகொள்க.
1
- 8 : நிரைவளை ..................................... பாங்கர்
(இ-ள்)
நிரைவளை யீட்டமும் - வரிசையான சங்குக் கூட்டமும் ; தரளக்குப்பையும்-முத்துக்குவியலும்
; அன்னக் குழுவும் - அன்னக் கூட்டங்களும் ; அணி குருகு இனமும் - அழகிய கொக்குக் கூட்டங்களும்
; கரும்கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும் - கரிய கிளைகளையுடைய புன்னையினது
மலரினின்றும் பூந்துகள் உதிர்ந்து கிடக்கும் இடங்களும் ; முடவெண்தாழை ஊழ்த்த முள்மலரும்
- முடம்பட்ட வெண்டாழையானது அரும்பிய முட்கள் பொருந்திய மலர்களும் ; அலவன் கவைகால்
அன்ன வெள் அலகும் - நண்டினது பிளவுபட்ட கால்போன்ற வெள்ளைநிறமுடைய பலகறையும் ;
வாலுகம் பரப்பி வலைவலிது ஒற்றினர்க்கு - மணன்மேட்டில் விரித்து வலையை வலிதாக ஈர்த்துக்கட்டின
நெய்தல்நில மாக்களுக்கு ; ஈதுஎன அறியாது - இன்னதென்று அறியப்படாமல் ; ஒன்றி வெள்ளிடையாம்
- வரம்பின்றி ஒன்றுபட்டு வெளியிடமாகிய ; மாதுஉடை கழிக்கரை - அழகுடைய உப்பங்கழியினது
கரையின்கண்ணுள்ள ; சேரி ஓர் பாங்கர் - பாதவர் சேரியின் ஒரு பக்கத்திலே என்க.
(வி-ம்.)
வளை - சங்கு. குப்பை - குவியல், குருகு - கொக்கு ; நாரையுமாம், கோடு - கிளை, கிடை
- இடம் தாழை முடம்பட்டிருத்தல் இயல்பு. அலவன் - நண்டு, கவைக்கால் - பிளவுபட்ட கால்,
அலகு - பலகறை ; அஃதாவது, கவடி. வாலுகம் - மணல்மேடு, ஒற்றினர்க்கு ; வினையாலணையும்
பெயர், ஒன்றுதல் - வரம்பின்றி ஒன்றுபட்டிருத்தல், மாது - அழகு, கழி - நெய்தல்நில
நீரோடை சேரி - பரதவர்சேரி. வளையீட்டம் முதலியன ஒன்றிக் கழிக்கரையிலுள்ள சேரி
என இயைக்க.
9-12:
புன்னொடு ...................................... அறிகுவனேல்
(இ-ள்)
புள்ளொடு பிணங்கும் புள் கவராது - சேவற் பறவைகளோட ஊடுகின்ற பெடைப் பறவைகள் கவர்ந்து
செல்லாதபடி ; வெள்நிற உணங்கல் காவலாக - வெண்ணிறமுடைய இறாமீனினது உணங்கலுக்குக்
காவலாக இருப்பவள் போல ; உலகு உயிர் கவரும் கொடுநிலைக்கூற்றம் - உலகத்திலுள்ள
உயிர்களைக் கவர்ந்து செல்கின்ற கொடுங்குணமுடைய கூற்றுவனே ; மகள்எனத் தரித்த நிலை
அறிகுவனேல் - பெண்ணென்று கண்டோர் கருதும்படி வேடம் பூண்டு நின்ற நிலைமையை யான்
முன்பே அறிந்திருப்பேனாயின் என்க,
|