|
தொகை. கடமா - மதயானை,
பூழி - புழுதி. பூழியை அலம்பி என இயைக்க. வலிமுகம் குரங்கு
29-34:
நெடுமுடி....................................ஆகுவன்
(இ-ள்)
நெடுமுடி அருவி அகிலொடு கொழிக்கும் - நெடிய முகட்டின்கண் அருவி நீரானது அகிற் கட்டைகளையும்
பிறவற்றையும் அலைகளாற் கொழித்தற்கிடனாகிய; கைலை வீற்றிருந்த-கைலைமலையில் எழுந்தருளியிருக்கின்ற;
கண்ணுதல் விண்ணனவன்-கண்ணுதற் கடவுளாகிய; நாடகக் கடவுள்- கூத்தப்பெருமான் என்னும்
; கூடல்நாயகன் - மதுரைப் பெருமானுடைய ; தாமரை உடைத்த காமர் சேவடி - தாமரை மலரைத்
தோற்கச் செய்த அழகிய சிவந்த திருவடிகளை ; உளம்நிறை தரித்த அன்பர்போல - உள்ளத்திலே
நிறையும்படி வைத்துள்ள அன்பர்போல ; உளம் குறை நீங்கி - மனக்குறை நீங்கி ; இன்பு
ஆகுவன் - இன்புருவமாகுவேன் என்க.
(வி-ம்.)
முடி - முகடு, கைலை - சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருமலை. கண்ணுதல் ; அன்மொழித்தொகை
, சிவபெருமான். உடைத்த ; உவவுமருபு. காமர் -அழகு.
இதனை,
தாமரை மலரே ! ஒருவேற்கு, நின்பதி மறைந்த நெட்டிரவகத்துள், நின்கனவினுள், கவர்மனத்தவரைக்
கானற்புறங் கண்டனனெனச் சிறியதொரு வாய்மை யுதவினையாயின், கைலை வீற்றிருந்த கூடல்நாயகன்
காமர்சேவடி யுளந்தரித்தவர்போலக் குறையுள நீங்கியில்பாகுலனென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும்
பயனும் அவை
|