|
14 - 18 : சேகரம்..........................போல
(இ-ள்)
சேகரம் கிழித்த நிறைமதி உடலம் - மூடியினால் கிழிக்கப்பட்ட முழுத் திங்களினது உடம்பு;
கலைகலை சிந்திய காட்சியது என்ன - கலைந்த கலைகள் சிதறிய தோற்றம்போல; கடுமான்
கீழ்ந்த கடமலை பல்மறுப்பு- சிங்கத்தினால் கிழிக்கப்பட்ட யானயினது பலவாகிய கொம்புகளையும்;
எடுத்து எடுத்து உந்தி - தூக்கித் தள்ளி ; மணிகுலம் சிதறி - மணிக்கூட்டங்களை அள்ளிவீசி
; கிளைஞர்கள் நச்சா பொருளினர் போல - சுற்றத்தாரால் விரும்பப்படாத பொருளையுடைய
புன்செல்வர்போல என்க.
(வி-ம்.)
சேகரம் - மூடி, கலைகலை : வினைத்தொகை, கிழித்த ; செயப்பாட்டு வினைப்பொருளில்
வந்தது. காட்சியது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. கடுமான் - சிங்கம் . கடமலை
- யானை, மருப்பு - கொம்பு, பொருளையுடைய புன்செல்வர் என்க.
19-28:
சாதகம் ............................................. ஆங்கு
(இ-ள்)
சாதகம் வெறுப்ப - சாதகப்பறவைகள் வெறுக்கும்படி ; சரிந்து அகழ்ந்து ஆர்த்து - ஒழுகிப்
பெயர்ந்து ஒலித்து, திரள் பளிங்கு - திரண்ட பளிக்குப் பாறைகளை ; உடைத்துச் சிதறுவது
என்ன - உடைத்துச் சிதறுகின்றதைப்போல ; வழி எதிர் கிடந்த - வழிக்கு எதிராகக்
கிடந்த ; உலமுடன் தாக்கி - கற்றூணோடு மோதி ; வேங்கையும் பொன்னும் ஓர் உழி திரட்டி-
வேங்கை மலர்களையும் பொன்னையும் ஓரிடத்தே சேர்த்து ; வரையரமகளிர்க்கு- மலையில்
வாழும் தெய்வமகளிர்க்கு ; அணி அணி கொடுத்து - அணிகின்ற அணிகலன்களாக வழங்கி ;
பனைகை கடமா - பனைபோன்ற துதிக்கையையுடைய மதயானையின் ; எடுத்துஉறு பூழி - பிடரியிற்
படிந்துள்ள புழுதியை ; வண்டு எழுந்து ஆர்ப்ப - அவ்விடத்தே மொய்த்துள்ள வண்டுகள் எழுந்து
ஆரவாரிக்கும்படி ; மணி எடுத்து அலம்பி - மணிகளை அகற்றிக் கழுவி ; மயில் சிறை விரித்து
ஆல - மயில்கள் சிறகுகளை விரித்துக் கூத்தாடவும் ; வலிமுகம் பனிப்ப - குரங்குகள்
குளிரால் நடுங்கவும் ; எதிர் சுனைக்குவளைமலர் புறம்பறித்து-எதிரிலுள்ள சுனையில் மலர்ந்துள்ள
குவளை மலர்களைப் புறத்தே பறித்து வீசி ; வரைஉடல் நிறைய - மலையிடன எங்கும் நிரம்பும்படி
; மாலை இட்டாங்கு- மாலைசூட்டினாற்போல என்க.
(வி-ம்.)
சாதகம் - நிலாமுகிப்புள், பளிங்கு - ஈண்டுச் சந்திர காந்தக்கல், இது நிலாவொளியைப்
பிரதிபலித்தலின் அதனை உண்ணும் சாதகப்புல் இமடினயுடைத்தல் கண்டு வெறுத்தன என்பது
கருத்தாகக் கொள்க. உலம் - திரள்கள். வேங்கை: மலர்க்கு ஆகுபெயர். வரைஅரமகளிர்
- மலையில் வாழும் தெய்வமகளிர், அணியணி ; வினைத்
|