|
மேலைமலைக் குவட்டின்கண்
; நின்பதி மறைந்த நெடு இரவு அகத்துள் - நின் கணவனாகிய ததிரவன் மறைந்தமையாலுண்டான
நெடிய இவ்விரவினூடே ; குருகும் புள்ளும் அருகு அணி சூழ - கொக்கும் ஏனைய நீர்ப்பறவைகளும்
நின்பக்கத்தே நிரலாகச் சூழாநிற்பவும் ; தேனொடும் ஆண்வண்டோடும் திருமகளோடும்
கூடி ; பெருந்துயில் இன்பம் பொருந்துபு நெடுநாள் - பெரிய துயிலால் உண்டாகும் இன்பத்தைப்
பொருந்தாநின்ற இந்த இடையாமத்தின்கண்; காணும் நின் கனவினுள் - நீ காணா நின்ற
நின்னுடைய கனவின்கண்; கவர் மனத்தவரை - வேறுபட்ட நெஞ்சத்தையுடைய என் காதலரை;
கொய்உளை கடுமான் கொளுவிய தேரொடு- கத்தரிகையால் கொய்து மட்டம் செய்யப்பட்ட
பிடரிமயிரையுடைய விரைவினையுடைய குதிரைகள் பூட்டிய தேருடனே; பூ உதிர் கானல் புறம்
கண்டனன் என - மலர்கள் உதிராநின்ற இந்நெய் நிலப் பரப்பின்கண் வர யான் கண்டேன்
என்று; சிறிதே ஒரு வாய்மை உதவினை ஆயின் - சிறியதோர் உண்மையை எனக்குக் கூறுவாயாயின்
என்க.
(வி-ம்.)
குரு - நிறம். அஃது ஒளியின் மேனின்றது. குருவும் கெழுவும் நிறனா கும்மே (தொல். சூ.
எஅக) என்பத தொல்காப்பியம். எனவே குருமணி என்றது ஈண்டு ஒளியிற் சிறந்த மாணிக்க
மணியை என்க. புனல் - ஈண்டு அருவிநீர், கோட்டுழி என்புழி உழி எழனுருபு, பதி - கணவன்,
தாமரைக்குக் கணவன் ஞாயிறு என்பது புலனெறி வழக்கம், குருகு - கொக்கு; நாரையுமாம்;
அன்னமுமாம். புள் - ஏனைய நீர்ப்பறவை என்க. தேன் - ஈண்டுப் பெடைவண்டையும், வண்டு
ஆண் வண்டையும் குறிப்பாலுணர்த்தின. திரு- திருமகள். அவள் தாமரை மலரின்கண் எழுந்தருளியிருத்தலின்
இங்ஙனம் கூறினள். நடுநாள் - இடையாமம். கவர்மனத்தவர் என்றது இப்பொழுது வருவேன்
என்று கூறிவைத்து அங்ஙனம் வாராது மாறுபட்ட கொடியோராகிய காதலர் என்பது தோன்ற நின்றது.
மான் - ஈண்டுக் குதிரை, கானற்புறம் - நெய்தனிலப்பரப்பு. தாமரையே ! நீ உறங்குகின்றனையல்லவா?
இங்ஙனம் உறங்குங்கால் நீ கனவு காண்டல் ஒருதலை, அந்தக்கனவிலுள் என் காதலன் தேரிலேறி
இங்கு வருவதாகக் கண்டிருப்பையே. அங்ஙனம் கண்டதுண்டாயில் அவ்வுண்மையை எனக்குக் கூறு
என்று வேண்டியபடியாம். அச்சொல் புரைதீர்ந்த நன்மை பயத்தலின் வாய்மை என்றும் கண்டேன்
என்பது ஒரே சொல்லாதலின் சிறிது என்றும் கூறினாள். இதனோடு,
புன்கண்கூர்
மாலைப் புலம்புமென் கண்ணேபோல்
துன்ப முழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ
|
(சிலப்.க.
கானல். 33) |
எனவரும் சிலப்பதிகாரத்தையும்
ஒப்புநோக்குக
|